கோவை பூத் கமிட்டி கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கங்கள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது, இதில் முதல் கூட்டத்தை கடந்த ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் கொங்கு மண்டலத்தை குறி வைத்து கோவையில் நடத்தியது.

