• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன சொல்கின்றன?

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன சொல்கின்றன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய சுங்கச் சட்டம்

1962ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சுங்கச் சட்டம், இந்தியாவில் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்கும் ஒரு அடிப்படைச் சட்டமாகும். இது கடத்தலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சட்டம் நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான தடை, கிடங்கு மற்றும் அபராதங்கள் போன்ற சுங்க விதிமுறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 1962ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் 17 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம், சட்டப்பூர்வ வர்த்தகத்தை எளிதாக்குவதும், கடத்தல் போன்ற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளைத் தடுப்பதும் ஆகும்.

கட்டாயத் தேவைகள்

இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் சுங்க சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் வரி விதிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் பயணிகள் சுங்க அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டி வரும். இதற்காக பிரத்யேகமாக “ATITHI” மொபைல் செயலி உள்ளது. இதன்மூலம் விமானத்தில் ஏறும் முன்பாகவே, வரி விதிக்கக்கூடிய பொருட்கள் பற்றிய விவரங்களையும் தாங்கள் கொண்டுவரும் வெளிநாட்டு பணத்தை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வசதி உள்ளது. 5,000 டாலருக்கு அதிமாக வெளிநாட்டு பணம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதனைக் கட்டாயமாக அறிவிப்பது அவசியம்.

பயணிகளுக்கான சலுகைகள்

உள்நாட்டு விமானங்கள்: உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பொதுவாக சுங்கக் கட்டுப்பாடுகளோ, சலுகைகளோ எதுவும் இல்லை. பயணிகள் சர்வதேச எல்லைகளைக் கடக்காததால் இந்த விலக்கு உள்ளது. எனினும், பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விமான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

சர்வதேச விமானங்கள்: சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் (மொபைல் போன்றவை) மற்றும் பயண நினைவுப் பொருட்கள் ஆகியவை வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச பயணிகள் ரூ.50,000 வரை மதிப்புள்ள பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம். ஆனால், அவை தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கக் கூடாது. இதுதவிர, 18 வயது மேற்பட்டோர் ஒரு லேப்டாப் எடுத்துவர அனுமதி உண்டு. 2 லிட்டர் வரை மதுபானம் எடுத்துவர முடியும். 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி விலக்கு உடன் கொண்டுவர முடியும். இவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள். அதுவே, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றால் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பயண நினைவுப் பொருட்கள் மற்றும் ரூ.15,000 வரை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும்.

எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?

ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்திய பயணி என்றால் 20 கிராம் வரை நகைகளை வரி இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார் அல்லது அதன் மதிப்பு ஆண் பயணி என்றால் ரூ.50,000 ஆகவும், அதுவே பெண் பயணி என்றால் ரூ.1,00,000 (ஒரு லட்சம்) ஆகவும் இருக்க வேண்டும். இந்த மதிப்பிற்குள் நகைகளைக் கொண்டுவந்தால் சுங்க வரி செலுத்தத் தேவையில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட அல்லது மதிப்பை விட கூடுதலாக தங்கத்தை எடுத்துவர விரும்பினால் அதன் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை சுங்க வரியாக செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் ஒரு இந்தியர் 1 கிலோவிற்கு மேல் தங்கம் கொண்டு வந்தால், இந்திய சந்தையின்படி தங்கத்தின் விலையில் 36.05 சதவீதத்தை சுங்க வரியாக செலுத்த வேண்டும்.

ஆனால், வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் மட்டுமே தங்கியிருந்து தங்க நகை வாங்கிச் சென்றால் கட்டாயம் சுங்க வரி செலுத்த வேண்டும்.

Also Read | கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ரச்சின் ரவீந்திரா.. ஜாம்பவான் வீரர்களின் சாதனைகள் தகர்ப்பு!

எவ்வளவு பணம் எடுத்துவர முடியும்?

வெளிநாட்டு பணம் என்றால், 5,000 டாலர் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடுத்துவரலாம். அதனைத் தாண்டிய மதிப்பு என்றால் கட்டாயம் அதனை அறிவிக்க வேண்டும். அதுவே இந்திய ரூபாய் என்றால் ரூ.25,000 வரை எடுத்து வரலாம்.

கடத்தலுக்கான தண்டனை

1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் கடத்தல் ஒரு கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் குற்றத்தின் கடுமையைப் பொறுத்து மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். பெரும்பாலும் அபராதத் தொகை சம்பந்தப்பட்ட பொருட்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், கடத்தப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 06, 2025 9:35 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் எவ்வளவு நகை, பணம் கொண்டு வரலாம்? – சுங்க விதிகள் என்ன சொல்கின்றன?

Read More

Previous Post

3 பந்தில் 4 விக்கெட்.. பந்தை சந்திக்காமலே ஆட்டமிழந்த முதல் வீரர்.. எதுவுமே செய்யாமல் இப்படி ஓர் அவுட் சாத்தியமானது எப்படி?

Next Post

சமயத்தை இழிவுபடுத்தினால் அதிகபட்ச தண்டனை வேண்டும் – Malaysiakini

Next Post
சமயத்தை இழிவுபடுத்தினால் அதிகபட்ச தண்டனை வேண்டும் – Malaysiakini

சமயத்தை இழிவுபடுத்தினால் அதிகபட்ச தண்டனை வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin