Last Updated:
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, சமூக ஊடகங்களில் அமெரிக்கர்களை தணிக்கை செய்யும் வெளிநாட்டினருக்கான புதிய விசா கட்டுப்பாட்டுகள் நடைமுறைக்கு வர இருப்பதாகத் தெரிவித்தார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற அமெரிக்க சமூக ஊடகங்களில் உள்ள பதிவுகளை நீக்கக் கோரும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விசா தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்றம் மற்றும் விசா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, சமூக ஊடகங்களில் அமெரிக்கர்களை தணிக்கை செய்யும் வெளிநாட்டினருக்கான புதிய விசா கட்டுப்பாட்டுகள் நடைமுறைக்கு வர இருப்பதாகத் தெரிவித்தார்.
அதன்படி, அமெரிக்க குடிமக்கள் வெளிநாடுகளில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக அபராதம் விதித்தல், துன்புறுத்தல் அல்லது குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.
குறிப்பாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கு விசா தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்க தொழில்நுட்ப தளங்களில் உள்ள பதிவுகளை நீக்குதல் அல்லது திருத்தியமைக்கக் கோரும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு எதிராக விசா தடை விதிக்கப்படும் என்றும் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
அமெரிக்க மண்ணில் இருக்கும்போது, அமெரிக்க தளங்களில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக அமெரிக்க குடிமக்கள் மீது வெளிநாட்டு அதிகாரிகள் கைது வாரண்டுகளைப் பிறப்பிப்பதையோ அல்லது அச்சுறுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மார்கோ ரூபாயோ கூறினார்.
வெளிநாட்டினருக்கான புதிய விசா கட்டுப்பாட்டுகள் – அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவிப்பு


