Last Updated:
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் செலரி கீரை உள்நாட்டு சந்தைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் செலரி கீரை உள்நாட்டு சந்தைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இன்றைய விலை நிலவரம் குறித்து ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மலை மாவட்டமான உதகை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் ஆங்கில காய்கறி வகையான செலரி எனப்படும் சிவரிக்கீரை பயிரிடப்படுகிறது. சமீப காலமாக ஒரு சில பகுதிகளில் மட்டுமே விளைவிக்கப்படும் இந்த காய்கறி, சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரியில் இருந்து இந்த காய்கறி சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, மும்பை, டெல்லி மற்றும் கேரளா போன்ற இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கும், துபாய், கத்தார், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
செலரியில் சுமார் 85% முதல் 95% வரை நீர்ச்சத்தும், செரிமானத்திற்கு உகந்த நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், 100 கிராம் செலரி கீரையில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் A, C, K ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
நீலகிரி மலைப் பகுதிகளில் விளையும் மேம்படுத்தப்பட்ட செலரி வகைகள் சுமார் 8 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் சிறந்த வைப்புத்திறன் கொண்டவை என்பதால் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவாக உள்ளது.
ஊட்டி மார்க்கெட் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் செலரி, இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிலோவிற்கு 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

