• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெளிநாடுகளில் குவியும் ஆர்டர்கள்! வீட்டில் இருந்தபடியே சர்வதேச பிஸ்னஸ் தொடங்குவது எப்படி? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெளிநாடுகளில் குவியும் ஆர்டர்கள்! வீட்டில் இருந்தபடியே சர்வதேச பிஸ்னஸ் தொடங்குவது எப்படி? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, மிகக் குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே தொடங்கி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் சர்வதேச அளவில் நல்ல லாபம் ஈட்டக்கூடிய டாப் 3 சுயதொழில் வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நறுமண மெழுகுவர்த்திகள் :

பண்டிகைகள், திருமணங்கள், வீட்டு அலங்காரம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் அரோமாதெரபி (Aromatherapy) போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகளில் நறுமண மெழுகுவர்த்திகளின் தேவை மிக அதிகமாக உள்ளது.

தேவையானவை: சோயா மெழுகு (Soy Wax), அத்தியாவசிய எண்ணெய்கள் (Essential Oils), அச்சுகள் (Molds) மற்றும் நூல்கள்.

முதலீடு & லாபம்: வெறும் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 முதலீட்டில் இதைத் தொடங்கலாம். ஆன்லைன் தளங்களில் ஒரு நல்ல நறுமண மெழுகுவர்த்தி ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை எளிதாக விற்பனையாகிறது.

மூலிகை மற்றும் இயற்கை சோப்புகள்:

ரசாயன சோப்புகளால் ஏற்படும் சரும பாதிப்புகள் காரணமாக, உலக மக்கள் இப்போது ஆர்கானிக் சோப்புகளை நோக்கி மாறி வருகின்றனர்.

தேவையானவை: சோப் பேஸ் (Soap Base), ஆட்டுப்பால், கற்றாழை, சார்கோல் (Charcoal), முல்தானி மட்டி மற்றும் இயற்கை எண்ணெய்கள்.

லாபம்: காகித உறைகள் போன்ற சுற்றுச்சூழல் நட்பு பேக்கிங் மூலம் இதன் மதிப்பை அதிகரிக்கலாம். சர்வதேச சந்தையில் ஒரு தனித்துவமான கைவினை சோப்பு 5 முதல் 10 டாலர் (சுமார் ரூ. 400 – ரூ. 800) வரை விற்பனையாகிறது.

சணல் மற்றும் பருத்தி பைகள் :

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உலகளவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சணல் மற்றும் பருத்தி பைகளுக்கான சந்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தயாரிப்பு முறை: தையல் கலை தெரிந்தவர்கள் மொத்த சந்தையில் இருந்து சணல் துணிகளை வாங்கி, வீட்டிலேயே ட்ரெண்டியான ஷாப்பிங் பேக்குகள், லஞ்ச் பேக்குகள் போன்றவற்றைத் தைக்கலாம். அவற்றின் மீது அழகான வாசகங்கள் அல்லது வடிவமைப்புகளை அச்சிடலாம்.

முதலீடு & லாபம்: ஒரு பை தயாரிக்க ரூ. 40 முதல் ரூ. 50 மட்டுமே செலவாகும் நிலையில், ஆன்லைன் சந்தையில் இவை ரூ. 300 முதல் ரூ. 800 வரை விற்கப்படுகின்றன.

ஆன்லைனில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்வது எப்படி?

உங்கள் தயாரிப்புகள் தயாரானதும், அமேசான் குளோபல் செல்லிங் (Amazon Global Selling) அல்லது பிளிப்கார்ட் செல்லர் தளத்தில் இலவசமாக கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு ஜிஎஸ்டி (GST) எண் மற்றும் வங்கிக் கணக்கு இருப்பது அவசியமாகும்.

தயாரிப்புகளின் தெளிவான புகைப்படங்களை எடுத்து பதிவேற்றம் செய்வதன் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். குறிப்பாக, கைவினைப் பொருட்களுக்காகவே பிரத்யேகமாக இயங்கும் ‘Etsy’ போன்ற சர்வதேச ஆன்லைன் தளங்களில் உங்கள் கடையைத் தொடங்குவதன் மூலம், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் பொருட்களை விற்று அதிக லாபம் சம்பாதிக்கலாம்.

Read More

Previous Post

நெய்மரின் கனவில் மண்ணள்ளி போட்ட வெண்முடி வீரர் எர்லிங்! வறுமை, புறக்கணிப்பு.. இப்போ சூப்பர் ஸ்டார்! | How did Erling Haaland Norway knock out the Neymar Brazil out of World Cup 2026

Next Post

Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது

Next Post
Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது

Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin