• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெற்றிக்கதை இதோ..!! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
வெற்றிக்கதை இதோ..!! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தர கன்னடா மாவட்டத்தின் கல்லல்லி என்ற பசுமையான கிராமத்தில், எளிமையான பின்னனியில் பிறந்த டாக்டர் மதுகேஷ்வரா ஜனக ஹெக்டே, இன்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேனீ வளர்ப்பு நிபுணராகவும் அபிதெரபி நிபுணராகவும் உள்ளார். ஜனவரி 18, 1968-ல் பிறந்த மதுகேஸ்வரா, வறுமை சூழ்ந்த குடும்பத்தில் வளர்ந்தார். இதன் காரணமாக எட்டாம் வகுப்பு வரையில்தான் படித்தார். இருப்பினும், தேனீக்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை அவரை தேனீ வளர்ப்பைத் தொடர வழிவகுத்தது.

விளம்பரம்

இன்று, 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், மதுகேஸ்வரா தேனீ வளர்ப்பில் மரியாதைக்குரிய நபராக இருக்கிறார். சமீபத்தில் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியின் 91-வது எபிசோடில் இதனை பிரதமர் நரேந்தர மோடி சுட்டிக்காட்டினார். ஒரு தேசிய தளத்தில் கிடைத்த இந்த அங்கீகாரம் அவரது விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

வெறும் ரூ.20,000 ரூபாய் கடன் வாங்கி ஐந்து தேன் கூட்டுடன் தொடங்கிய மதுகேஸ்வரா, ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்டார். இருப்பினும், அவர் தொடர்ந்து தனது தேனின் தரத்தை பாதுகாத்து, இறுதியில் தேன் பதப்படுத்துதலில் தேர்ச்சி பெற்றார். 1998-ம் ஆண்டு, அவரும் அவரது மனைவி சவிதா எம். ஹெக்டேவும் சவிமது இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிறுவியபோது, ​​அவரது பயணம் புதிய திருப்பத்தை கண்டது. இந்த முயற்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைத்து, அவர்களின் தேன் ஜாம் இங்கிலாந்து சந்தைக்கு செல்ல வழிவகுத்தது.

இதையும் வாசிக்க : நெஞ்சை உருக்கும் கதை : அமரன் குறித்து ரசிகர்கள் கருத்து…!!

இன்று, மதுகேஸ்வரா 40 ஏக்கரில் 1,000 தேனீக் கூடுகளை நிர்வகித்து, 114 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார். மது தேனீ நர்சரியின் நிறுவனர் என்ற முறையில், மதுகேஸ்வரா ஆண்டு முழுவதும் தேனீக் கூட்டங்களுக்கு உணவளிக்க மருத்துவ தாவரங்களின் பூக்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் தனித்துவமான தேனீ காலண்டர் போன்ற புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். தேனீ தயாரிப்புகளின் ஆரோக்கிய நலன்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வரும் அவர் அபிதெரபியில் நிபுணத்துவத்தை உருவாக்கியுள்ளார். இது தேனீ விஷம், ராயல் ஜெல்லி, மகரந்தம் மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றைப் பயன்படுத்தி நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது.

விளம்பரம்

கடந்த ஆறு ஆண்டுகளாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் (KVIC) முதன்மை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஹெக்டே, தேனீ கொட்டும் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். கோலாகிபிஸ் கிராமத்தில், புதிய தலைமுறை தேனீ ஆர்வலர்களை வளர்ப்பதற்கும், நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பயிற்சி மையத்தை நிறுவியுள்ளார். 280-க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்களைக் கொண்ட அவரது பண்ணை, முழுமையான ஆரோக்கியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

டாக்டர் மதுகேஸ்வராவின் சாதனைகள் பாராட்டியும், பாரம்பரிய மருத்துவம் மற்றும் அபிதெரபி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் கொல்கத்தாவில் உள்ள இந்திய ஓரியண்டல் ஹெரிடேஜ் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ராணி மேரியின் பிரிட்டிஷ் தேசிய பல்கலைக்கழகம், அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. 2023-ல் அவர் “இந்தியாவின் கோடீஸ்வர விவசாயி” என்று பெயர் சூட்டப்பட்டார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

எந்கக் கட்சியில் யார் போட்டியிடுகிறார்? – Thinakaran

Next Post

எவின் லூயிஸின் பவர் ஹிட்டிங்: இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கு இந்தியத் தீவுகள்! | Evin Lewis power hitting West Indies thrash England in first odi

Next Post
எவின் லூயிஸின் பவர் ஹிட்டிங்: இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கு இந்தியத் தீவுகள்! | Evin Lewis power hitting West Indies thrash England in first odi

எவின் லூயிஸின் பவர் ஹிட்டிங்: இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கு இந்தியத் தீவுகள்! | Evin Lewis power hitting West Indies thrash England in first odi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin