• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெறும் 3 மணி நேரத்தில் மும்பை – ஐதராபாத் போயிடலாம்…! இந்தியன் ரயில்வேயின் புதிய திட்டம்…

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வெறும் 3 மணி நேரத்தில் மும்பை – ஐதராபாத் போயிடலாம்…! இந்தியன் ரயில்வேயின் புதிய திட்டம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அந்த வகையில் இந்திய ரயில்வே பல நவீன வசதிகள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களை கொண்ட ரயில்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் ஏற்கனவே உள்ள பல ரயில்களை குறிப்பிடத்தகுந்த வசதிகளோடு மாற்றி அமைத்துள்ளது.

இந்த சூழலில் மும்பை-ஹைதராபாத் அதிவேக ரயில் (MHHSR) திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததும், தற்போது 14-16 மணிநேரமாக இருக்கும் மும்பையிலிருந்து ஹைதராபாத் செல்லும் பயண நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்படும். அதாவது மும்பையிலிருந்து ஹைதராபாத்தை வெறும் 3 மணி நேரத்தில் அடைந்துவிட முடியும்.

மும்பை-ஹைதராபாத் அதிவேக ரயில் பாதை, பெரும்பாலும் “767 கி.மீ. புல்லட் ரயில்” என்று அழைக்கப்படுகிறது. இது வரவிருக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 11 ஸ்டேஷன்களை இணைக்கும் ஒரு திட்டமாகும்.

இந்த அதிவேக ரயில் திட்டம் குறித்த சில முக்கிய விவரங்கள்:

  • ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் (அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில்) இயக்கப்படும்.
  • இந்த வழித்தடத்தில் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், புனே மற்றும் ஹைதராபாத் உட்பட 11 மூலோபாய ஸ்டேஷன்கள் அடங்கும்.
  • இந்த ரயிலில் நிலநடுக்கக் கண்டறியும் அமைப்புகள் (UrEDAS), டிஜிட்டல் சிக்னலிங் மற்றும் உயர்தர பாதைகளின் கலவை போன்ற அம்சங்கள் இருக்கும்.
  • டிக்கெட்டுகள் முதல் வகுப்பு ஏசி ரயில் கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிக விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரீமியம், ஆனால் அனைவரும் அணுகக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது.
  • இந்த அதிவேக ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், ஆய்வுகள் மற்றும் சீரமைப்பு திட்டமிடல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள 6 அதிவேக ரயில் பாதைகளில் இந்தத் திட்டமும் ஒன்றாகும்.

    ஏற்கனவே மும்பை-அகமதாபாத் பாதை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே MHHSR செயல்பாட்டிற்கு வந்தவுடன் சுற்றுலாவை மேம்படுத்தும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் நாட்டில் ரயில் பயண தரங்களை மறுவரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Location :

    Mumbai,Maharashtra

    Read More

    Previous Post

    அஸ்வெசும கொடுப்பனவு குறித்து போலி பிரசாரங்கள்; வெளியான அறிவித்தல்

    Next Post

    இங்கிலாந்து தொடருக்கான யு-19 அணியில் வைபவ் சூரியவன்ஷி: ஆயுஷ் மாத்ரே கேப்டன்! | Vaibhav Suryavanshi in team india U19 squad England series Ayush Mhatre captain

    Next Post
    இங்கிலாந்து தொடருக்கான யு-19 அணியில் வைபவ் சூரியவன்ஷி: ஆயுஷ் மாத்ரே கேப்டன்! | Vaibhav Suryavanshi in team india U19 squad England series Ayush Mhatre captain

    இங்கிலாந்து தொடருக்கான யு-19 அணியில் வைபவ் சூரியவன்ஷி: ஆயுஷ் மாத்ரே கேப்டன்! | Vaibhav Suryavanshi in team india U19 squad England series Ayush Mhatre captain

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin