• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்து தொடருக்கான யு-19 அணியில் வைபவ் சூரியவன்ஷி: ஆயுஷ் மாத்ரே கேப்டன்! | Vaibhav Suryavanshi in team india U19 squad England series Ayush Mhatre captain

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்து தொடருக்கான யு-19 அணியில் வைபவ் சூரியவன்ஷி: ஆயுஷ் மாத்ரே கேப்டன்! | Vaibhav Suryavanshi in team india U19 squad England series Ayush Mhatre captain
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இங்கிலாந்தில் இந்திய யு-19 அணிக்கும் இங்கிலாந்து யு-19 அணிக்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய யு-19 அணியில் இளம் அசத்தல் வீரர்களான வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுஷ் மாத்ரே மும்பைக்காக மிகப் பிரமாதமான முதல் தர கிரிக்கெட் அறிமுக போட்டியில் ஆட ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காகவும் கலக்கினார். இவர்தான் இங்கிலாந்து செல்லும் யு-19 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் – ஜூலை 2025ல் 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள், 2 இரண்டு மல்டி-டே போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய யு-19 அணிக்கு மும்பை விக்கெட் கீப்பர் அபிகியான் குந்து துணைக் கேப்டனாக இருப்பார். வைபவ் சூரியவன்ஷியுடன் தொடக்க வீரராக இறங்கிய பஞ்சாப் வீரர் விஹான் மல்ஹோத்ராவும் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சவுராஷ்ட்ராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஹர்வன்ஷ் பங்காலியா , வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யுதஜித் குஹா, கேரளாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் முகமது ஈனான், பஞ்சாபைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் அன்மோல்ஜீத் சிங் ஆகியோரும் யு-19 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா லெக் ஸ்பின்னர் முகமது ஈனான் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியவர். இதே தொடரில் அன்மோல்ஜித் சிங் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சவுராஷ்ட்ரா வீரர் ஹர்வன்ஷ் பங்காலியா 117 ரன்கள் என்று சதம் விளாசி தன் திறமையை வெளிப்படுத்தினார்.

கூச்-பெஹார் டிராபி என்னும் இளையோர் 4 நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட குஜராத் ஆல்ரவுண்டர் கிலான் படேலும் இந்த அணியில் உள்ளார். இவர் இடது கை ஸ்பின்னர் என்பதோடு பேட்டிங் திறமையும் கொண்டவர். இந்த அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவருமே வயது அடிப்படையில் 2026 யு-19 உலகக் கோப்பைக்குத் தகுதியுடையவர்கள்தான்.

2026-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து யு-19 உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.

இந்திய யு-19 அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மவுல்யராஜ் சிங் சவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குந்து, ஹர்வன்ஷ் பங்காலியா (விக்கெட் கீப்பர்), அம்ப்ரீஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது ஈனான், ஆதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்.



Read More

Previous Post

வெறும் 3 மணி நேரத்தில் மும்பை – ஐதராபாத் போயிடலாம்…! இந்தியன் ரயில்வேயின் புதிய திட்டம்…

Next Post

தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா…? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்…!

Next Post
தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா…? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்…!

தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா...? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin