Last Updated:
வெனிஸ் பைனாலே (Venice Biennale) எனும் புகழ்பெற்ற கலை விழாவில் இந்தியா மீண்டும் தடம் பதித்தபோது, அதற்குப் பொருத்தமான ஒரு கம்பீரமான தோற்றத்தில் நீதா அம்பானி கலந்துகொண்டார்.
61-வது வெனிஸ் பைனாலே நிகழ்வில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரங்கம் இடம்பெற்றுள்ளது.
வெனிஸ் பைனாலே (Venice Biennale) எனும் புகழ்பெற்ற கலை விழாவில் இந்தியா மீண்டும் தடம் பதித்தபோது, அதற்குப் பொருத்தமான ஒரு கம்பீரமான தோற்றத்தில் நீதா அம்பானி கலந்துகொண்டார். சமீபத்தில் மெட் காலா (Met Gala) நிகழ்வில் ஈஷா அம்பானி உடுத்திய புடவையைத் தொடர்ந்து, இந்தியக் கைவினைக்கலையின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் நீதா அம்பானியின் இந்த உடை அமைந்திருந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணா உருவாக்கிய மெல்லிய ‘ஷிஃபான்-ஜார்ஜெட்’ புடவையை நீதா அம்பானி அணிந்திருந்தார். அதேபோல், அவர் அணிந்திருந்த பாரம்பரிய பனாரசி வேலைப்பாடுகள் கொண்ட ‘லேஸ்’ பிளவுஸ் இதற்கு நவீனத் தோற்றத்தைத் தந்தது. காஷ்மீரின் புகழ்பெற்ற ‘சுதேஷ்’ (Swadesh) பிராண்டின் ‘சோஸ்னி’ கைவேலைப்பாடு கொண்ட ஷால் அவரது தோளில் மிளிர்ந்தது. இதை உருவாக்க பல மாதங்கள் கடின உழைப்பு தேவைப்படும்.
அதேபோல் அவர் அணிந்திருந்த ‘வாலஸ் சான்’ காதணிகள் ஒரு கலைப் படைப்பாகவே கருதப்பட்டன. இந்தக் காதணிகள் ஈட்டி மரத்தால் செய்யப்பட்டவை. இந்த மரம் ஆன்மீக அறிவு மற்றும் கருணையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. டைட்டானியம் வேர்கள் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்ட இந்தக் காதணியின் ஒரு பக்கம் அமைதியைக் குறிக்கும் நீலக்கல் மற்றும் மறுபக்கம் தீவிரமான உணர்ச்சியைக் குறிக்கும் சிவப்புக்கல் பதிக்கப்பட்டிருந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ல் 61-வது வெனிஸ் பைனாலே நிகழ்வில் இந்திய அரங்கம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. இது இந்தியப் பண்பாட்டுத் தூதரகத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். மத்திய கலாச்சார அமைச்சகம், நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் மற்றும் செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த அரங்கத்தை அமைத்துள்ளன. உலகளாவிய இடப்பெயர்வுகள் மற்றும் நகரமயமாக்கலுக்கு மத்தியில் “வீடு” என்ற உணர்வு எவ்வாறு மாறுகிறது என்பதை இந்தக் கண்காட்சி விளக்குகிறது. இதைக் கலை நிபுணர் டாக்டர் அமீன் ஜாஃபர் தொகுத்து வழங்கியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


