தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல்துறையினருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
தவெகவின் பலம்
இதனுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவையும் சேர்த்து தவெகவின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் குறைவாக உள்ள போதிலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரி கடிதம் அளித்துள்ளார்.
இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 6 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், பதவியேற்பு நிகழ்வில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

