• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெங்காயம் விலை 150% உயர்வு.. என்ன நடக்குது..? எல் நினோ வேலையை காட்டுதா? | Onion Prices Surge 150% in India as El Niño Threatens Monsoon – Super El Niño Impact on Inflation?

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெங்காயம் விலை 150% உயர்வு.. என்ன நடக்குது..? எல் நினோ வேலையை காட்டுதா? | Onion Prices Surge 150% in India as El Niño Threatens Monsoon – Super El Niño Impact on Inflation?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெங்காயம் விலை 150% உயர்வு.. என்ன நடக்குது..? எல் நினோ வேலையை காட்டுதா?

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றால் விலைவாசி வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கும் வேளையில், அடுத்த பெரும் பாதிப்பாக எல் நினோ எனப்படும் மோசமான பருவ நிலை பாதிப்பு இந்திய உணவு சந்தையை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வரும் வேளையில், இதன் தாக்கம் இப்போதே துவங்கியுள்ளது.

எல் நினோ நிகழ்வு இந்த ஆண்டு வலுவாக உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பருவமழை பெய்வது குறையும். இதனால் விவசாய உற்பத்தி பாதித்து காய்கறி முதல் தாணியங்கள் வரையில் அனைத்தும் விலை உயரும். இதன் தாக்கம் எப்போதை தெரிய துவங்கியுள்ளது.

வெங்காயம் விலை 150% உயர்வு.. என்ன நடக்குது..? எல் நினோ வேலையை காட்டுதா?

கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 10 – 12 ரூபாய் விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தற்போது 150 சதவீதம் உயர்ந்து கிலோவுக்கு 25 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் அக்ரிடெக் நிறுவனமான டெய்லிகுரூஸ் நிறுவனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த வெங்காயம் ரீடைல் சந்தைக்கு வரும் போது கிலோவுக்கு 40 ரூபாய் அளவில் வருகிறது என்றும், நாளுக்கு நாள் வெங்காயம் விலை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் ராஜேஷ்.

இதேபோல் தமிழ்நாட்டில் விற்கப்படும் வெங்காயம் பெரும்பாலும் நாசிக்-ல் இருந்து வருவதால் போக்குவரத்து செலவும் வெங்காயம் விலையில் சேர்கிறது.

இதேபோல் ஈசந்தை நிறுவனத்தின் முக்கிய ஊழியரான பிரிவின் கூறுகையில் கடந்த 10 நாட்களில் வெங்காயம் விலை 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் வெங்காயம் விலை கிலோ 15 ரூபாயாக இருந்தது, தற்போது இது 26-28 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த வருட முக்கிய பருவமழை காலத்திலை சூப்பர் எல் நினோ மிகவும் மோசமாக துவங்கியிருக்கும் காரணத்தால் 56 சதவீத நுகர்வு சந்தையை பாதித்துள்ளது. இது நாட்டின் ஜிடிபி பெரும் நெருக்கடியில் தள்ள உள்ளது, இதன் தாக்கம் பங்குச்சந்தை வரையில் தள்ளும் என்பது அடுத்த பெரிய பிரச்சனையாக உள்ளது.

பொதுவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் போது மக்கள் பிற பொருட்களை வாங்குவதை குறைப்பார்கள். இதனால் மொத்த உற்பத்தி, வர்த்தக சந்தையும் பாதிக்கும். ஒவ்வொரு முறை பருவமழை துவங்கும் போது இத்தகைய தாக்கம் இருப்பது இயல்பு என்றாலும் இந்த முறை சூப்பர் எல் நினோ உருவாகியிருப்பது கூடுதல் அச்சத்தை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

English summary

Onion Prices Surge 150% in India as El Niño Threatens Monsoon – Super El Niño Impact on Inflation?

Onion prices in India have witnessed a sharp 150% increase within a short period, with wholesale prices rising from ₹10-12 per kg to ₹25 per kg and retail prices reaching up to ₹40 per kg, primarily due to the emerging Super El Niño effect weakening the monsoon.

Story first published: Tuesday, June 30, 2026, 15:08 [IST]

Other articles published on Jun 30, 2026

Read More

Previous Post

100 நாள் வேலை திட்டம் இனி 125 நாட்களாக அதிகரிப்பு.. இன்று முதல் அமல்.. மத்திய அரசு அறிவிப்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சுகாதார அமைச்சகத்தின் செலவினச் சரிசெய்தல் அதிகபட்சம் ரிம 500 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது – நிதி அமைச்சகம் – Malaysiakini

Next Post

சுகாதார அமைச்சகத்தின் செலவினச் சரிசெய்தல் அதிகபட்சம் ரிம 500 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது – நிதி அமைச்சகம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin