• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வீட்டிலிருந்தே ஆதாரில் மொபைல் நம்பரை மாற்றலாம்.. அதுவும் ஒரு சில நிமிடங்களில்..! | Want to Change Your Aadhaar Mobile Number? Here’s How to Do It on the App

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வீட்டிலிருந்தே ஆதாரில் மொபைல் நம்பரை மாற்றலாம்.. அதுவும் ஒரு சில நிமிடங்களில்..! | Want to Change Your Aadhaar Mobile Number? Here’s How to Do It on the App
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வீட்டிலிருந்தே ஆதாரில் மொபைல் நம்பரை மாற்றலாம்.. அதுவும் ஒரு சில நிமிடங்களில்..!

அரசாங்க ஆவணங்களிலேயே ஆதார் கார்டு கிட்டத்தட்ட எல்லா சேவைகளைப் பெறுவதற்கும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆதார் கார்டை உங்களுடைய மொபைல் நம்பருடன் இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஓடிபி அடிப்படையிலான சேவையை தடையின்றி பெற முடியும். இதற்கு முன்னர் வரை ஆதார் மையங்களுக்கு சென்று தான் மொபைல் நம்பரை மாற்ற முடியும். ஆனால் இப்போது வீட்டில் இருந்தே ஒரு சில நிமிடங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

சிலர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு நம்பரைப் பயன்படுத்தி வருவார்கள். இது போன்ற நபர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இடையில் தங்களுடைய மொபைல் நம்பரை மாற்றியவர்கள் கட்டாயம் ஆதாருடன் மொபைல் நம்பரை இணைத்திருக்க வேண்டும். இதற்காக ஆதார் ஆப் (Aadhaar App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பழைய நம்பரை பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் புது நம்பரை இந்த அப்ளிகேஷன் மூலமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்.

வீட்டிலிருந்தே ஆதாரில் மொபைல் நம்பரை மாற்றலாம்.. அதுவும் ஒரு சில நிமிடங்களில்..!

அப்போதுதான் ஓடிபி பெறுவதில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்து சில நிமிடங்களில் தங்களுடைய புதிய நம்பரை ஆதாருடன் இணைக்க முடியும். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. நீங்கள் பழைய நம்பரை மாற்றுவதற்கு முன்னரே இந்தச் செயல்முறையை செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தி வரும் நம்பரை செயல்பாட்டில் வைத்துக் கொண்டுதான் புதிய நம்பரோடு புதுப்பிக்க முடியும்.

ஆதார் ஆப்-ஐ எங்கு டவுன்லோட் செய்வது?: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக டவுன்லோட் செய்யலாம். ஆனால் மோசடி இணையதளங்கள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் நீங்கள் டவுன்லோட் செய்வதற்கு முன்னர் அது உண்மையிலேயே UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் தானா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆதார் ஆப் மூலம் மொபைல் நம்பரை எப்படி புதுப்பிப்பது?: முதலில் அதிகாரப்பூர்வ ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை தேர்ந்தெடுங்கள். எல்லாம் முடித்த பின்னர் 6 இலக்க பின் நம்பரை அமைக்க வேண்டும். உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்து முடித்தவுடன் “மொபைல் நம்பர் அப்டேட்” என்ற சர்வீஸ் இருக்கும்.

அதில் உங்களுடைய புது மொபைல் நம்பரை என்டர் செய்யுங்கள். உங்கள் புதிய மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். ஓடிபி செயல்முறையை முடிக்க வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு உங்கள் பழைய நம்பர் இருப்பதும் அவசியம். புதிய நம்பரை புதுப்பிக்கும் போது பழைய நம்பருக்கும் ஒரு ஓடிபி அனுப்பப்படும். மொபைல் நம்பரை அப்டேட் செய்ததற்கு கட்டணமாக 75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த செயல்முறையை முடித்த பின்னர் உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். இந்த வசதியை பயன்படுத்துவதற்கு உங்களிடம் பழைய மொபைல் நம்பர் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

Share This Article

Story first published: Monday, August 24, 2026, 17:58 [IST]

Other articles published on Aug 24, 2026

Read More

Previous Post

Tamilmirror Online || புதிய அமெரிக்க தூதுவர் வந்தடைந்தார்

Next Post

அன்வார் கலைத்துறையில், குறிப்பாக திரைப்படத் தயாரிப்பில், அதிக சுதந்திரத்தை விரும்புகிறார் – Malaysiakini

Next Post

அன்வார் கலைத்துறையில், குறிப்பாக திரைப்படத் தயாரிப்பில், அதிக சுதந்திரத்தை விரும்புகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin