Last Updated:
வெள்ளைப் பூண்டை எடுத்து வந்து காயவைத்து அதனை உடைத்து தயார்படுத்துவதற்கு உள்ளே 45 நாட்கள் ஆகிவிடும். ஆனால் அதிகமான கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் மலை காய்கறி பயிர்கள் அதிகமாக விவசாயம் செய்யும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்குகிறது. நீலகிரி மலை மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் பல்வேறு விவசாய பொருட்கள் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஊட்டி மலை காய்கறி பயிர்களில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், வெள்ளைப் பூண்டு மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிர் செய்யப்படுகிறது.
ஆனால் பல்வேறு காய்கறி வகைகளை விளைவிக்க விதைகள் அதிகமான அளவில் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால் வெள்ளை பூண்டு விவசாயத்தை மேற்கொள்வதற்கு வெள்ளைப் பூண்டிலிருந்து விதையை தயார் செய்கின்றனர் விவசாயிகள்.
சிறந்த முறையில் விற்பனையானால் வெள்ளைப்பூண்டு அதிகமான லாபம் ஈட்டும் ஒரு விவசாய பயிர் ஆகவும், இல்லாத பட்சத்தில் இதன் விதைகள் மறுமுறை பயிர் செய்வதற்கும் பயன்படுமாறு விவசாயிகள் வெள்ளைப் பூண்டினை உபயோகிக்கின்றனர்.
வெள்ளைப் பூண்டு விதை தயார் செய்வது குறித்து விவசாயி ராசாத்தி தெரிவிக்கையில், “வெள்ளைப் பூண்டை எடுத்து வந்து காயவைத்து அதனை உடைத்து தயார் படுத்துவதற்கு உள்ளே 45 நாட்கள் ஆகிவிடும். ஆனால் அதிகமான கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. கடையில் இருந்து விதையை எடுத்து வந்தால் அதிகமான முதலீடு ஆகிறது. அதற்காக நாங்கள் விதையை கொண்டு வந்து விதைப்பதற்காக தயார் செய்கிறோம்.
கடைசி முறை வெள்ளைப் பூண்டு விலை குறைந்ததால் முதலீடு கூட கைக்கு கிடைக்கவில்லை. இந்த நாள் நாங்கள் நகைகளை அடமானம் வைத்து மீண்டும் விவசாயத்தில் இறங்கி உள்ளோம்.
நல்ல விலை கிடைத்தால் காலநிலை ஒத்துழைப்பதில்லை, காலநிலை ஒத்துழைத்தால் விலை குறைவாகப் போகிறது எனவே அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக இதனை கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
The Nilgiris,Tamil Nadu

