• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வியட்நாம் படகு விபத்து : பலியான இந்தியர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்.. உதவி எண்கள் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வியட்நாம் படகு விபத்து : பலியான இந்தியர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்.. உதவி எண்கள் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத்தலைவர், துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Extremely saddened to learn about the tragic news of a boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam.


My sincere condolences to the families who lost their loved ones. My prayers for the early recovery of the injured survivors.

Our Embassy and Consulate are…

— Narendra Modi (@narendramodi) July 11, 2026

மேலும், இந்திய தூதரகமும் துணைத் தூதரகமும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும், வியட்நாம் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

விபத்தைத் தொடர்ந்து ஹோசிமின் பகுதியில் இந்திய துணை தூதரகத்தால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து தகவல் அல்லது விவரம் வேண்டுவோர் +84362817930, +84915523714, +84334520414 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தங்கள் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் விபத்தில் உயிரிழந்த நிலையில், லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதே தங்களின் உடனடி முன்னுரிமை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர், ஆளுநர் இரங்கல்

அதேபோல வியட்நாம் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் வலிமையும், ஆரோக்கியத்தையும் பெறட்டும் என்றும் ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனவேதனையும், துயரமும் அடைந்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் சிக்கியவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

கருணா – டக்ளஸ் – தேசப்பந்து – ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

Next Post

சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு பின்னடைவு… இங்கிலாந்து முதலிடம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு பின்னடைவு… இங்கிலாந்து முதலிடம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

சர்வதேச டி20 தரவரிசையில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு பின்னடைவு… இங்கிலாந்து முதலிடம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin