• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வியட்நாம் கோரம்! “அப்பாவ பார்க்கணும்…” முருகபிரபுவின் 8 வயது மகள் கண்ணீர்! உடைந்த சொந்தங்கள் | Vietnam heartbreaking: Palani Murugaprabhu daughter cries for her father

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வியட்நாம் கோரம்! “அப்பாவ பார்க்கணும்…” முருகபிரபுவின் 8 வயது மகள் கண்ணீர்! உடைந்த சொந்தங்கள் | Vietnam heartbreaking: Palani Murugaprabhu daughter cries for her father
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Sunday, July 12, 2026, 12:08 [IST]

பழனி: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த முருகபிரபுவின் 8 வயது மகள் சர்விகா, அப்பா வேண்டும் என உறவினர்களிடம் அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொபைல் நிறுவன விநியோகஸ்தர் முருகபிரபு (44) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

Vietnam boat accident

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த முருகபிரபு (44) மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் பழனியில் ‘லாவா’ (Lava Mobile) மொபைல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இவர்களது சிறப்பான வணிகச் செயல்பாட்டிற்காக, சம்மந்தப்பட்ட மொபைல் நிறுவனம் சார்பில் இவர்களை வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்காக இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை (08.07.2026) இங்கிருந்து வியட்நாம் பயணம் சென்றனர். அங்கு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் (Phu Quoc) தீவு அருகே, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இரு வேறு படகுகளில் பிரிந்து பயணித்துள்ளனர்.

இதில் முதல் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்றபோது, அந்தப் படகு எதிர்பாராத விதமாக திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வியட்நாம் படகு விபத்து! சிறப்பு அதிகாரி சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ்! விஜய் டிக் அடிக்க காரணம்! யார் இவர்?

வியட்நாம் படகு விபத்து! சிறப்பு அதிகாரி சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ்! விஜய் டிக் அடிக்க காரணம்! யார் இவர்?

இந்த முதல் படகில் பயணித்த பழனி விநியோகஸ்தர் முருகபிரபு (44) துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். அதே நேரத்தில், மற்றொரு படகான இரண்டாவது படகில் (Boat) பயணித்த நிர்மல்குமார் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் சிக்காமல் பத்திரமாக உயிர் தப்பியுள்ளார்.

முதல் படகில் இருந்து 20 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த முருகபிரபுவின் உடலைத் தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த முருகபிரபுவுக்கு மகாலட்சுமி (37) என்ற மனைவியும் சர்விகா (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் முருகபிரபுவின் தாய் திலகவதியுடன் வசித்து வருகிறார்கள். சர்விகா தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். முருகபிரபு உயிரிழந்தது தெரியவந்ததும் சர்விகாவை பாதியிலேயே பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர்.

15 பேரை பலி கொண்ட வியட்நாம் படகு விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? என்ன நடந்தது?

15 பேரை பலி கொண்ட வியட்நாம் படகு விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? என்ன நடந்தது?

அவரிடம் தந்தையின் இறப்பு குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வரவர அவர்களின் அழுகையின் மூலம் தனது தந்தைக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதை மட்டும் அறிந்த அந்த பிஞ்சுக் குழந்தை தனது தந்தையை பார்க்க வேண்டும் என கூறி தாயிடமும் அவரது உறவினர்களிடமும் அழுது கேட்ட சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்கச் செய்தது. முருகபிரபு மரணம் பழனி மொபைல் டீலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary

Muruga Prabhu’s 8 years daughter cried by asking to see her father who died in Vietnam Boat accident.

Read More

Previous Post

ஈரான் கடற்படைத் தளம் மீது அமெரிக்கா நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்!

Next Post

டிரம்ப் சொன்னது நடந்துவிட்டது..!! ஈரானின் பழிக்கு பழி பட்டியலில் முதலிடத்தில் டிரம்ப் பெயர்..!! | Iranian Press Names Trump, EU Figures as Targets — Diplomatic Tensions Rise

Next Post
டிரம்ப் சொன்னது நடந்துவிட்டது..!! ஈரானின் பழிக்கு பழி பட்டியலில் முதலிடத்தில் டிரம்ப் பெயர்..!! | Iranian Press Names Trump, EU Figures as Targets — Diplomatic Tensions Rise

டிரம்ப் சொன்னது நடந்துவிட்டது..!! ஈரானின் பழிக்கு பழி பட்டியலில் முதலிடத்தில் டிரம்ப் பெயர்..!! | Iranian Press Names Trump, EU Figures as Targets — Diplomatic Tensions Rise

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin