• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விடிந்ததும் வந்த ஈமெயில்.. 1000 பேர் திடீர் பணிநீக்கம்.. Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்! | Netflix Fires 1,000 Employees via Wednesday Morning Email: Tech and Product Teams Hardest Hit

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விடிந்ததும் வந்த ஈமெயில்.. 1000 பேர் திடீர் பணிநீக்கம்.. Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்! | Netflix Fires 1,000 Employees via Wednesday Morning Email: Tech and Product Teams Hardest Hit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விடிந்ததும் வந்த ஈமெயில்.. 1000 பேர் திடீர் பணிநீக்கம்.. Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்!

அமெரிக்காவில் புதன்கிழமை காலை விடிந்ததும் உலகிலேயே மிகப்பெரிய OTT தளமாக விளங்கும் நெட்பிளிக்ஸ் சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான ஈமெயிலை அனுப்பி இந்நிறுவன ஊழியர்களை அதிரவைத்துள்ளது.

உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்தும் வேளையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களையும், பார்வை நேரத்தையும் இழந்து வரும் நெட்பிளிக்ஸ் தனது நிதி ஆதாரத்தையும், ஊழியர்களையும் மேம்பட்ட முறையில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

விடிந்ததும் வந்த ஈமெயில்.. 1000 பேர் திடீர் பணிநீக்கம்.. Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்!

நெட்பிளிக்ஸ் 2022ஆம் ஆண்டு பணிநீக்கத்தைத் தொடர்ந்து தற்போது பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. கொரோனா காலத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகமும், பார்வை நேரம், சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அனைத்தும் படுவேகமாக உயர்ந்த நிலையில் அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்ந்தது.

ஆனால் கொரோனாவுக்கு பின்பு அனைத்தும் தலைகீழாக மாறிய காரணத்தால் நெட்பிளிக்ஸ் 2 முறை அதாவது 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 500 பேரை பணிநீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது 1000 பேர் அதாவது நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 6 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலையில் விடிந்த உடன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஈமெயிலில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரிகளான கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாரான்டோஸ், நம்முடைய குறிக்கோள் இந்த உலகை எண்டர்டெயின் செய்வது அதற்குத் தேவையான அனைத்தையும் மக்களுக்கு அளிப்பது தான். இதை முறையாகச் செய்ய ஊழியர்களையும், நிதி ஆதாரங்களையும் ஓழுங்குப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் ப்ராடெக்ட், டெக்னாலஜி, லீகல், மனிதவளம் என அனைத்தும் பிரிவுகளிலும் அடங்குவர். அடுத்த வாரம் நெட்பிளிக்ஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் வேளையில் தற்போது பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் நெட்பிளிக்ஸ் கடந்த சில மாதங்களாக மந்தமான வளர்ச்சி, பார்வையாளர்கள் நேரம் பெரிய அளவில் குறைந்து வருவதாகவும் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதைச் சரி செய்யவே சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிர்வாகம், பிரபலமான பல யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களை அழைத்து தனது தளத்தில் கன்டென்ட்களை பிரித்யேகமாக அப்லோடு செய்ய கோரி ஒப்பந்தம் செய்து வருகிறது.

Share This Article

English summary

Netflix Fires 1,000 Employees via Wednesday Morning Email: Tech and Product Teams Hardest Hit

Netflix Fires 1,000 Employees via Wednesday Morning Email: Tech and Product Teams Hardest Hit — விடிந்ததும் வந்த ஈமெயில்.. 1000 பேர் திடீர் பணிநீக்கம்.. Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்!

Story first published: Wednesday, October 14, 2026, 20:39 [IST]

Other articles published on Oct 14, 2026

Read More

Previous Post

ஜெர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ.. இந்தியர்கள் 3 பேர் பலி! ரோமானிய நபர் கைது! கொலையா? | Three Indians burned to death in Germany? Romanian national arrested! What happened?

Next Post

நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.        | Makkal Osai

Next Post
நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.        | Makkal Osai

நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.        | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin