• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.        | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
நாட்டில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு , ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பகைமை அதிகரிப்பு: ஹக்காம் கவலை.        | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசிய தேசிய மனித உரிமைகள் சங்கம் (ஹக்காம்), நாட்டில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெளிநாட்டவர் மீதான வெறுப்புப் பேச்சு  மற்றும் விரோதப் போக்கு குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு எதிராகத் தாங்களே நீதி வழங்க முயலும் தனிநபர்களின் நடவடிக்கை கவலையளிப்பதாக ஹக்காம் சுட்டிக்காட்டியுள்ளது.   கடந்த 31 ஜூலை  வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, வெறும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஹக்காம் இந்த விவகாரத்தைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அதன் தலைவர்  வழக்கறிஞர் டத்தோஸ்ரீ எம் .இராமச்செல்வம் கூறினார்.                                                                        ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாப்பது மற்றும் மியான்மருக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவது தன்னார்வமாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் இத்தகைய அறிக்கை வெளியிடப்படுவது, சமூகத்தில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு சாதாரணமாகி வருவதைக் காட்டுகிறது.   எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ சட்டப்பூர்வ அதிகார அமைப்பாகச் செயல்பட முடியாது. குற்றச்சாட்டுகள் எதுவாகினும் அவை சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்; ஒரு முழு சமூகத்தையும் குறிவைக்கக் கூடாது.

​  வன்முறைச் சம்பவங்கள்: ஜோகூரில் ரோஹிங்கியா சமூகத்தினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் இத்தகைய விரோதப் போக்கின் ஆபத்தான விளைவை உணர்த்துகிறது. இத்தகைய வன்முறைகள் நிபந்தனையின்றி கண்டிக்கப்பட வேண்டும் . அகதிகளின் மனித உரிமை. ரோஹிங்கியா மக்கள் பத்தாண்டுகளாகத் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளைச் சந்தித்துவருகின்றனர். மலேசியாவில் அவர்கள் இருப்பது அவர்களின் அடிப்படை மனித உரிமையையோ கண்ணியத்தையோ பறித்துவிடாது.

​பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதைக் கைவிட்டு, ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் உரிய சட்ட வழிகளில் புகார் அளிக்க வேண்டும் எனவும் ஹக்காம் கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, எளிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று  தலைவர் டத்தோ ஸ்ரீ எம். இராமச்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Previous article8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9.01 லட்சம் நிதி ஒதுக்கீடு!  இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு  தொடரும் ஆதரவு – டத்தோஸ்ரீ ரமணன்
Next articleதாமான் மேடான் ஜெயாவில் நடந்த சண்டைக்கும் இனப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை – காவல்துறை
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

விடிந்ததும் வந்த ஈமெயில்.. 1000 பேர் திடீர் பணிநீக்கம்.. Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்! | Netflix Fires 1,000 Employees via Wednesday Morning Email: Tech and Product Teams Hardest Hit

Next Post

ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி

Next Post
ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி

ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin