தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல் அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும். அதாவது 543 ஆகவே தொடர வேண்டும். எம்பிக்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தினோம்” என்றார். மாணிக்கம் தாகூர் கூருகையில், தொகுதி மறுவரையறை தமிழகத்தை பாதிக்கும். இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் சதி” என்றார்.



