• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாட்டி வதைக்கும் ‘நெருப்பு’ வெயில்.. 40 டிகிரி செல்சியஸை தொட்ட பிரான்ஸ்.. வரலாறு காணாத வெப்பநிலை! | Record June Heat in UK; Parts of France Cross 40°C Amid Red Alerts

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாட்டி வதைக்கும் ‘நெருப்பு’ வெயில்.. 40 டிகிரி செல்சியஸை தொட்ட பிரான்ஸ்.. வரலாறு காணாத வெப்பநிலை! | Record June Heat in UK; Parts of France Cross 40°C Amid Red Alerts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vignesh Selvaraj

Time
Published: Thursday, June 25, 2026, 0:08 [IST]

லண்டன்: ஐரோப்பா எங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பல நகரங்களில் வெப்பநிலை உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்தச் சூழலில், வெப்பம் தாங்க முடியாமல் பிரான்சில் இரு குழந்தைகள் காருக்குள் உயிரிழந்துள்ளன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெப்ப அலையினால் (Heat wave) நிலைகுலந்து போயுள்ளன. பிரான்ஸ் நாட்டின் வெப்பமிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ள நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ‘ரெட் அலர்ட்’ விடுத்து அவசர நிலையை அறிவித்துள்ளன.

Record June Heat in UK Parts of France Cross 40 C Amid Red Alerts

முன்கூட்டியே உக்கிரமடைந்துள்ள இந்த கோடை வெப்பம், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் முடக்கியுள்ளதுடன், உலகளாவிய பருவநிலை மாற்றம் (Climate Change) குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பள்ளிள் மூடப்பட்டுள்ளன. அல்லது பாடவேளைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஜூன் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தெற்கு இங்கிலாந்து: இங்கு வெப்பநிலை 35.8°C ஆக உயர்ந்து, ஜூன் மாதத்தின் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக 1967 ஆம் ஆண்டு பதிவான கடுமையான வெப்ப அலையின் சாதனையை இந்த ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது.

ஸ்காட்லாந்து: இங்கும் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாக இது பதிவாகியுள்ளது, அங்கு வெப்பநிலை 29.4°C ஐ எட்டியுள்ளது.

40 டிகிரி செல்சியஸ்… முடங்கிய பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின்

ஸ்பெயின்: ஸ்பெயினின் உள்நிலப் பகுதிகளில் (Mainland Spain) வெப்பநிலை இன்று 39°C ஐக் கடந்தது. இது 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜூன் மாதத்தில் பதிவான மிக உயர்ந்த தினசரி சராசரி வெப்பநிலையாகும்.

பிரான்ஸ்: செவ்வாய்க்கிழமை வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளைச் சந்தித்த பிரான்ஸ், அதைத் தொடர்ந்து புதன்கிழமையும் 40°C என்ற கொடூரமான வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய சுற்றுலாத் தலங்கள் & மின்வெட்டு

பிரான்சின் கடுமையான வெப்பம் காரணமாக அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மின்தடையால் இருளில் மூழ்கின. மேலும், உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மற்றும் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் போன்ற இடங்கள் தங்களது பார்வையாளர்கள் நேரத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.

ஸ்தம்பித்த ஐரோப்பா

பெல்ஜியம் நாடும் இந்த வாரத்தில் மிகக் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange-weather alert) விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கொளுத்தும் வெயிலைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் (ஏர் கண்டிஷனர் போன்றவை) இல்லாத மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இந்த அசாதாரண சூழல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ரயில்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துகளில் பெரும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. கோடையின் தொடக்கத்திலேயே ஐரோப்பா இப்படித் தகிப்பது, பருவநிலை மாற்றத்தின் அபாயகரமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

English summary

UK breaks temperature record for June as parts of France hit 40C. Western Europe on Red alert. The UK’s record high for June has gone even higher.

Read More

Previous Post

’ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி’

Next Post

E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு செல்லாதா? மத்திய அரசு விளக்கம்..!! | E20 Petrol Safe, Insurance Claims Stay Valid: Government Dismisses Fuel-Mileage Fears

Next Post
E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு செல்லாதா? மத்திய அரசு விளக்கம்..!! | E20 Petrol Safe, Insurance Claims Stay Valid: Government Dismisses Fuel-Mileage Fears

E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு செல்லாதா? மத்திய அரசு விளக்கம்..!! | E20 Petrol Safe, Insurance Claims Stay Valid: Government Dismisses Fuel-Mileage Fears

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin