• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாகன ஓட்டிகளே குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நயாரா..!! அரசு நிறுவனங்கள் எப்போது? | Nayara Energy Cuts Petrol by Rs 5 and Diesel by Rs 3 as West Asia Tensions Ease — First Private Retailer to Reduce Pump Prices

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வாகன ஓட்டிகளே குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நயாரா..!! அரசு நிறுவனங்கள் எப்போது? | Nayara Energy Cuts Petrol by Rs 5 and Diesel by Rs 3 as West Asia Tensions Ease — First Private Retailer to Reduce Pump Prices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாகன ஓட்டிகளே குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நயாரா..!! அரசு நிறுவனங்கள் எப்போது?

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டதால் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக நயாரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் , டீசல் விலைகளை உயர்த்தி இருந்தது. தற்போது ஈரான் போர் முடிந்ததால் முதல் நிறுவனமாக நயாரா எனர்ஜி பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ளது.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹெச்பி ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் தவிர நயாரா, ரிலையன்ஸ் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் , டீசல் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் நயாரா நிறுவனம், நாடு முழுவதும் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 என குறைத்துள்ளது.

வாகன ஓட்டிகளே குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நயாரா..!! அரசு நிறுவனங்கள் எப்போது?

போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, விலையை அதிகரித்த நயாரா நிறுவனம், தற்போது விநியோகம் சீராகியுள்ளதால் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஈரானில் பிப்ரவரி 28ஆம் அதேதி போர் ஏற்பட்டது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வு கண்டது.

எனவே கடந்த மார்ச் 26 அன்று நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை ரூ.5, டீசல் விலையை ரூ.3 என உயர்த்தி இருந்தது. அரசு பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.7.50 வரை உயர்த்தியிருந்தன. தற்போது நயாரா நிறுவனம் மார்ச் மாதம் உயர்த்திய விலையை அப்படியே குறைத்துள்ளது.

போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்ததால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் சீராகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாடு நீங்கி, எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 73.25 டாலர் வரை வர்த்தகம் ஆகிறது. அதேபோல் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் 69.81 டாலர் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ள நயாரா நிறுவனம், புதிய விலை குறைப்பு, நாடு முழுவதும் உள்ள அதன் 7,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் இன்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்களை நடத்தி வரும் அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.76க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 க்கு விற்பனையாகிறது. தனியார் நிறுவனமே பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துவிட்ட நிலையில் அரசு நிறுவனங்கள் எப்போது பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share This Article

English summary

Nayara Energy Cuts Petrol by Rs 5 and Diesel by Rs 3 as West Asia Tensions Ease — First Private Retailer to Reduce Pump Prices

வாகன ஓட்டிகளே குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நயாரா..!! அரசு நிறுவனங்கள் எப்போது?- Nayara Energy reduced petrol prices by Rs 5 per litre and diesel by Rs 3 per litre across its nationwide retail network, marking the first fuel retailer to cut pump prices in over two years. The move follows a fall in global crude oil rates after easing tensions in West Asia, which pushed retailers to pass savings to consumers.

Story first published: Wednesday, July 1, 2026, 13:18 [IST]

Other articles published on Jul 1, 2026

Read More

Previous Post

“இந்த” 5 விஷயங்கள் ரொம்பவே முக்கியம்.. சின்ன தப்பு செய்தாலும் பெரிய பிரச்சினை ஆகிடும்! கவனம் | What are the Top 5 Reasons Health Insurance Claims Get Rejected and How Policyholders Can Avoid Them

Next Post

அவதூறு வழக்கு: DAP ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் டோனி புவா கேள்வி! | Makkal Osai

Next Post
அவதூறு வழக்கு: DAP ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் டோனி புவா கேள்வி! | Makkal Osai

அவதூறு வழக்கு: DAP ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் டோனி புவா கேள்வி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin