• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைக்கான வாகன இறக்குமதிகளின் மீது அரசாங்கம் 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசின் இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கவுள்ளதாக அந்த சங்கம் மதிப்பிட்டுள்ளது.



புதிய மேலதிக வரி, சர்வதேச நாணயமாற்று வீத உயர்வு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் ஆகியவற்றின் கூட்டுத் தாக்கம் காரணமாக, வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப அவற்றின் விலைகள் 1.5 மில்லியன் ரூபாய் முதல் 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என சங்கம் எச்சரித்துள்ளது.

விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் 



தொழில்துறை மதிப்பீடுகளின்படி, வெவ்வேறு வகைப்பாட்டின் கீழ் உள்ள வாகனங்களின் விலைகள் பின்வருமாறு உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

அதற்கமைய சிறிய ரகக் சிற்றூந்துகளான Suzuki Alto / Mazda Carol 421,750 ரூபாயாகவும், Alto, Carol Hybrid – 542,250 ரூபாயாகவும், Suzuki WagonR / Mazda Flair – 482,000 ரூபாயாகவும், WagonR / Flair Hybrid – 602,500 ரூபாயாகவும், Nissan Dayz Highway Star – 662,750 ரூபாயாகவும், Mitsubishi EK X –  723,000 ரூபாயாகவும் உயரும்.

வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | 50 Pt Additional Tax On Vehicle Imports To Sl

நடுத்தர சிற்றூந்துகளான Toyota Passo / Daihatsu Boon – 542,250 ரூபாயாகவும், Toyota Yaris – 602,500
ரூபாயாகவும், Toyota Axio Hybrid –  903,750 ரூபாயாகவும் அதிகரிக்கும்.



அதிநவீன விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்களான Toyota Raize / Daihatsu Rocky / Subaru Rex Hybrid – 903,750 ரூபாயாகவும்,  Honda Vezel X 1,084,500 ரூபாயாகவும், Honda Vezel Z – 1,205,000 ரூபாயாகவும், Honda Vezel Z Play 1,325,500
ரூபாயாகவும் அதிகரிக்கும்.

நாணய மாற்று வீதங்கள் அதிகரிப்பு 


இது குறித்து வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி கருத்துத் தெரிவிக்கையில்,

“வாகன இறக்குமதியின் மீது இவ்வாறானதொரு பாரிய வரி விதிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | 50 Pt Additional Tax On Vehicle Imports To Sl

ஏற்கனவே அமெரிக்க டொலர், ஜப்பானிய யென் மற்றும் பிரித்தானிய பவுண்ட் ஆகியவற்றின் நாணய மாற்று வீதங்கள் அதிகரித்துள்ளன. இவற்றுடன் அரசாங்கம் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியை 2.5 வீதத்தினால் உயர்த்தியது.



தற்போது இந்த 50 வீத மேலதிக வரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த வரிச்சுமையையும் நுகர்வோர் மீதே சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கீழ்நிலை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சரவாக் மாவட்ட போலீஸ் தலைவர் மீது தீவிர விசாரணை! | Makkal Osai

Next Post

IPL 2026 : சென்னை அணியின் இறுதி ஹோம் மேட்ச்… முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறாரா எம்.எஸ். தோனி? | ஐ.பி.எல் போட்டோகேலரி

Next Post
IPL 2026 : சென்னை அணியின் இறுதி ஹோம் மேட்ச்… முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறாரா எம்.எஸ். தோனி? | ஐ.பி.எல் போட்டோகேலரி

IPL 2026 : சென்னை அணியின் இறுதி ஹோம் மேட்ச்... முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறாரா எம்.எஸ். தோனி? | ஐ.பி.எல் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin