வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு
பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கர
வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
டிப்பர் -முச்சக்கரவண்டி மோதி விபத்து
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்தநிலையில் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

