இந்நிலையில், முராத் நகர் பகுதியில் இன்று (பிப்.14) காவல் துறையினர் வழக்கமான தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரை வாகனத்தை நிறுத்துமாறு காவல் துறையினர் சைகை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் வாகனத்தை திருப்பிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
அவர்களை பிடிக்க பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேரது கால்களில் குண்டுகள் பாய்ந்தது. மேலும், ஒருவர் எந்தவொரு காயமுமின்றி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஷாருக், அபிஷேக் ஜாதவ், நதீம், ஹரிஷ் மற்றும் ஷிவான்ஷ் ஆகிய 5 பேரிடமும் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
முன்னதாக, தற்போது தப்பியோடிய 6வது நபரை தேடும் பணியை காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.