• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் (ARED) வன்மையாகக் கண்டித்துள்ளது.


இது குறித்து தொடர்புடைய சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்பிற்குரியவர்களுக்காக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரி பல ஆண்டுகளாக அமைதியான முறையில் போராடி வரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அவர்களின் தொடர்ச்சியான இப்போராட்டம், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகிய அவர்களின் அடிப்படை உரிமைகளின் வெளிப்பாடாகும்.

 

பெண்களுக்கு எதிரான வன்முறை 



தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதை உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, உண்மை மற்றும் நீதியைப் பெறுவதற்கான தேடலில் 2 வருடங்களாகத் துன்பங்களையும் உளவியல் ரீதியான வடுக்களையும் தாங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை | Association Relatives Of The Disappeared Condemns


அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உடலியல் ரீதியான வன்முறை மேற்கொள்ளப்பட்டமை குறித்து பெரும் கவலையடைகின்றோம். சூழ்நிலை எதுவாக இருப்பினும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கும், மனித கண்ணியத்தைப் பேணுவதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உள்ளது.



அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் நீதியைத் தேடுவதில் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் போராட்டங்கள் பொது அமைதிக்கோ அல்லது தேசிய பாது காப்பிற்கோ அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது.



காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) உட்பட அரசாங்க நிறுவனங்களை அமைதியான முறையில் கேள்விக்குட்படுத்துவதும், பயனுள்ள உண்மை கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைக் கோருவதும் ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத கூறுகளாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை | Association Relatives Of The Disappeared Condemns



நீதி கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் பின்னணியில் இன்றைய சம்பவம் நடந்துள்ளது என்பது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் நீண்டகாலமாக உள்ள நியாயமான கேள்விகள் இவைதான்:

அவர்களின் அன்பிற்குரியவர்கள் எங்கே? அரசாங்கத்தின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு என்ன நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்?


இக்கேள்விகளுக்கு அச்சுறுத்தல், வன்முறை அல்லது அடக்குமுறைகள் மூலம் பதிலளிக்க முடியாது.


சிறீலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் கோருவது:

  1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  2. இன்று காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வன்முறை குறித்து சுயாதீனமான, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
  3. சட்டவிரோதமான அல்லது அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
  4. பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அமைதியாக ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
  5. அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து பாது காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  6. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வன்முறை அல்லது அடக்குமுறை மூலம் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் கலந்துரையாட வேண்டும்.
  7. உள்நாட்டு பொறிமுறையை நாம் நம்பிக்கை பெறும் வகையில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும், இதன் அர்த்தம் நாம் உள்நாட்டு பொறிமுறையை வலுபடுத்துமாறு கோருகின்றோம்.


சர்வதேச சமூகத்திற்கு


இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைமையை கூர்ந்து கவனிக்குமாறு சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.


உண்மை மற்றும் நீதியை அமைதியான முறையில் தொடர்ந்து கோரி வரும் பாதிக்கப்பட்ட மக்களை நடத்தும் விதமே, இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை | Association Relatives Of The Disappeared Condemns


காணாமல் ஆக்கப்பட்ட தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று அறியக் கோரும் ஒரு அமைதியான தாயை ஒருபோதும் வன்முறையோடு எதிர்கொள்ளக் கூடாது. நீதியைக் கோரும் ஒரு பாதிக்கப்பட்ட நபரை ஒருபோதும் குற்றவாளியாக நடத்தக் கூடாது.


இக்குடும்பங்களின் தொடர்ச்சியான துயரங்கள் இயல்புநிலையாக மாற அனுமதிக்கப்பட முடியாது.


எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இலங்கையின் முன்னேற்றம், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ” எனக் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அது மீண்டும் தொடங்கப்பட்டால் அன்வார் ‘சாபத்துக்குள்ளாவார்’ – சனுசி – Malaysiakini

Next Post

Bullet Train : வேகமெடுக்கும் புல்லட் ரயில் பணிகள்.. 3 மலைச் சுரங்கங்கள் மற்றும் பிரம்மாண்ட பாலங்கள் தயார்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Bullet Train : வேகமெடுக்கும் புல்லட் ரயில் பணிகள்.. 3 மலைச் சுரங்கங்கள் மற்றும் பிரம்மாண்ட பாலங்கள் தயார்! | India News (இந்தியா செய்திகள்)

Bullet Train : வேகமெடுக்கும் புல்லட் ரயில் பணிகள்.. 3 மலைச் சுரங்கங்கள் மற்றும் பிரம்மாண்ட பாலங்கள் தயார்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin