Last Updated:
wayanad landslide | வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 உடல்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 3 பேரை தேடும் பணி தொடர்கிறது.
கேரள மாநிலம், வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த 2 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.
வயநாடு அருகேயுள்ள கல்லாடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் நேற்று முன்தினம் காலை 11:15 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதை பணியில் இருந்த தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கி புதைந்தனர். அவர்களைத் தேடும் பணி இரவு பகலாக நீடிக்கிறது. முதல்நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3-ஆவது நாளான இன்று மேலும் இரண்டு பேரின் உடல்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
இதனால், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக, அங்கு ஆய்வு செய்தபிறகு கேரள அமைச்சர் சித்திக் தெரிவித்தார்.
VIDEO | Wayanad: “Two dead bodies have been recovered; search operations are in full swing to find other three missing people”, says Kerala Minister T Siddique after visiting the Wayanad landslide site.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/VFUQwgPvj9
— Press Trust of India (@PTI_News) July 9, 2026
இதனிடையே, உயிரிழந்தவர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுரங்கப்பாதை பணியில் இருந்த பொறியாளர் ராகுல் சர்மா மற்றும் ஜே.சி.பி. ஆபரேட்டர் முகமது இம்ரான் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Jul 09, 2026 12:43 PM IST


