• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! அமெரிக்கா அறிவிப்பு.. உலக தங்க மார்க்கெட்டில் சூறாவளி வரப்போகுது? | US Fed Keeps Interest Rates Steady: What Chair Kevin Warsh’s Decision means for India?

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! அமெரிக்கா அறிவிப்பு.. உலக தங்க மார்க்கெட்டில் சூறாவளி வரப்போகுது? | US Fed Keeps Interest Rates Steady: What Chair Kevin Warsh’s Decision means for India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Shyamsundar I

Time
Published: Thursday, July 30, 2026, 6:55 [IST]

நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அந்நாட்டின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்கவைத்துள்ளது. தற்போது அங்கு வட்டி விகிதம் 3.50% முதல் 3.75% ஆக உள்ளது.

அமெரிக்க வங்கியின் புதிய தலைவரான கெவின் வார்ஷ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், வட்டி குறைக்கப்படும் அல்லது உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

USA

இந்த முடிவின் பின்னணி என்ன, அமெரிக்க பங்குச்சந்தையில் என்ன நடந்தது, இது சாதாரண இந்திய மக்களின் பாக்கெட் மற்றும் தங்கம் விலையை எப்படி பாதிக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

வட்டி குறைக்கப்படாதது ஏன்? ஃபெடரல் ரிசர்வ் தலைவர் சொல்வது என்ன?

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே பணவீக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதை 2% என்ற அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அமெரிக்க வங்கியின் முக்கிய இலக்கு.

இதையடுத்து நேற்று பல்வேறு முடிவுகளை எடுப்பதற்காக அந்நாட்டு மத்திய வங்கி கூடியது. இந்த கூட்டத்திற்குப் பின் பேசிய தலைவர் கெவின் வார்ஷ், நாங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தவோ குறைக்கவோ இல்லை. இப்போதைக்கு இதே விகிதம் தொடரும். ஆனால் இதை அமைதியாக உட்கார்ந்திருக்கும் ரிலாக்ஸ் காலம் என்று நினைக்க வேண்டாம்.

நாட்டின் பொருளாதாரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம், என்று விளக்கமளித்துள்ளார். மேலும், பணவீக்கத்தை 2% நிலைக்கு கொண்டு வருவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வங்கியின் 12 உறுப்பினர்களில் 9 பேர் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்றும், 3 பேர் வட்டி விகிதத்தை 0.25% உயர்த்த வேண்டும் என்றும் வாக்களித்தனர்.

அமெரிக்க பங்குச்சந்தையில் வீழ்ச்சி

இந்த அறிவிப்பு வெளியானவுடன் அமெரிக்க பங்குச்சந்தையில் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டது. Dow Jones 744 புள்ளிகள் (1.4%) சரிந்தது. S&P 500 0.3% அளவுக்கு குறைந்தது. Nasdaq லேசான உயர்வைச் சந்தித்தது. அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் வர இன்னும் காலம் எடுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று அச்சம் உருவாகியுள்ளது.

ந்திய பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும்?

அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு சிறிய பொருளாதார மாற்றமும் இந்தியாவை நேரடியாகவே பாதிக்கும்.

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இந்தியாவில் இருந்து எடுத்து அமெரிக்காவில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும், இந்திய ரூபாயின் மதிப்பு குறையக்கூடும்.

ரூபாயின் மதிப்பு குறைந்தால், நாம் வெளிநாட்டில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் அன்றாட பொருட்களின் விலையை உயர்த்த வழிவகுக்கும்.

அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்காததால், இந்திய ரிசர்வ் வங்கியும் இந்தியாவில் வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைக்க வாய்ப்பில்லை. இதனால் உங்கள் ஹோம் லோன் மற்றும் கார் லோன் வட்டி விகிதங்கள் குறையாமல் அப்படியே தொடரலாம்.

தங்கம் விலை மற்றும் நகை பிரியர்களுக்கு என்ன பாதிப்பு?

இந்திய மக்களுக்கு எப்போதும் மிக முக்கியமான ஒன்று தங்கம். அமெரிக்க வட்டி விகிதத்திற்கும் தங்கம் விலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பொதுவாக, பங்குச்சந்தையில் மோசமான சூழல் நிலவும்போதோ அல்லது அமெரிக்காவில் பணவீக்க பயம் இருக்கும்போதோ, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி படையெடுப்பார்கள். இதனால் உலகச் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயரும். இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை குறைக்காமல் வைத்திருக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் அச்சம் நிலவுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை உடனடியாக மாற்றங்கள் இருக்காது, அதே சமயம் தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்பதே இந்த முடிவின் முக்கிய சாராம்சம்.

English summary

US Fed Keeps Interest Rates Steady: What Chair Kevin Warsh’s Decision means for India?

Read More

Previous Post

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Next Post

ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்! | Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move

Next Post
ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்! | Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move

ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்! | Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin