• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்! | Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்! | Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்!

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இன்று தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ள வேளையில் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. கடந்த 5 நாட்களாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல் செய்யாமல் பெட் முடிவுகளுக்காக சந்தையை அமெரிக்க அரசு தயார் செய்து வந்த நிலையில், இன்று காலையில் ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது.

இதனால் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரையில் உயர்ந்து பணவீக்கத்தின் அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால் 2வது நாள் கூட்டத்தில் ஈரான் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் பணவீக்க பாதிப்பும் பெட் கூட்டத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கெவின் வார்ஷ் தலைமையிலான பெட் எத்தகைய முடிவை எடுக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்!

தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் 1.2 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் இன்றைய வர்த்தகத்திலும் பெரும் சரிவு பதிவாகும் என பலரும் கணித்தனர். ஆனால் ஈரான் தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டு சந்தை அந்தர் பல்டி அடித்துள்ளது.

இன்றைய சர்வதேச வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 0.07 சதவீதம் மட்டுமே சரிந்து 4025.91 டாலராக உள்ளது, இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் மட்டும் சரிந்து 1,41,366 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலையின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மானிக்கப்போவது பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை தான்.

ஈரான் தாக்குதல் மூலம் டாலர் மதிப்பு சரிந்ததே தங்கம் விலையில் பெரும் சரிவு தவிர்க்கப்பட்டதிற்கு காரணமாக அமைந்துள்ளது. அடுத்தாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் பணவீக்கம் அச்சம் காரணமாக பத்திர முதலீடுகள் மீதான லாபமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் விளைவு தங்கம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது, சொல்லப்போனால் பெட் முடிவுகளுக்காக மொத்த சந்தையும் நிலையற்ற தன்மையில் உள்ளது.

ஈரான் தாக்குதல் மூலம் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை பெரிய அளவில் குறையும் என்பதால் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தேக்கம் அடைந்துள்ளது, முதலீட்டாளர்கள் எவ்விதமான பொசிஷனையும் எடுக்க மனமில்லாமல் உள்ளனர் என்பதே தற்போதைய உண்மை நிலை.

பெட் முடிவுகள் மூலம் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பதை பார்த்தால் SMA அளவு நமக்கு முக்கியமான சில தரவுகளை கொடுக்கிறது. பெட் முடிவுகள் தங்கத்திற்கு சாதகமாக அமைந்தால் 10 நாள் SMA அளவான 4070 டாலரில் இருந்து 50 நாள் SMA அளவான 4202 டாலர் வரையில் உயரும். பெட் முடிவுகள் தங்கத்திற்கு ஜாக்பாட் ஆக அமைந்தால் 100 மற்றும் 200 நாள் SMA அளவான 4,447 – 4,491 டாலர் வரையில் உயரலாம்.

இந்திய சந்தையில் பொறுத்த வரையில் 1,41,152 ரூபாய் முதல் 1,43,575 ரூபாய் வரையில் உயர வாய்ப்புள்ளது.

Share This Article

English summary

Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move

Iran Attack Triggers Oil Surge & Gold Twist – Fed Decision Now Holds the Key to Next Big Move — ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்!

Story first published: Wednesday, July 29, 2026, 10:33 [IST]

Other articles published on Jul 29, 2026

Read More

Previous Post

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! அமெரிக்கா அறிவிப்பு.. உலக தங்க மார்க்கெட்டில் சூறாவளி வரப்போகுது? | US Fed Keeps Interest Rates Steady: What Chair Kevin Warsh’s Decision means for India?

Next Post

DECODE | Pyrocumulonimbus | Europe's Deadly Fire Clouds | ஐரோப்பாவை விழுங்கும் தீ மேகங்கள்

Next Post
DECODE | Pyrocumulonimbus | Europe's Deadly Fire Clouds | ஐரோப்பாவை விழுங்கும் தீ மேகங்கள்

DECODE | Pyrocumulonimbus | Europe's Deadly Fire Clouds | ஐரோப்பாவை விழுங்கும் தீ மேகங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin