• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
September 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்குமாறும் மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பாரிய மாற்றங்களைச் செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம்




எனினும், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்தியமையினால் தன்னிச்சையான கைதுகளும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதும் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல் | Release Military Controlled Lands In North East Un




2025 ஆம் ஆண்டில் அவ்வாறு காவலின் போதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதோ இடம்பெற்ற 18 மரணங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 3 சம்பவங்களும், அதேபோன்று 2025 ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமாக தாக்குதல் நடாத்துதல் தொடர்பான 602 சம்பவங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சில வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை நிலையான பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலை வன்முறைகள்



மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளடங்கலாக இராணுவ மற்றும் சிவிலியன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மட்டத்திலான உளவு பார்த்தல், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்குதல்கள் இடம்பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல் | Release Military Controlled Lands In North East Un



பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து அதனை விரைவாக இரத்து செய்து புதிய சட்டமொன்றை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரை செய்கிறது.

இதற்கு மேலதிகமாக, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் வரைவு செய்யப்பட்டுள்ள NGO சட்டத்தைச் திருத்துதல் அல்லது இரத்து செய்தலும் பரிந்துரைகளில் அடங்கும்.




சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையிலடைக்காது சுகாதார ரீதியிலான மறுவாழ்விற்கு உட்படுத்துமாறும் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Nepal | நகரங்களை விழுங்கிய நதி… நேபாள பேரழிவின் பயங்கரத்தை காட்டிய செயற்கைக்கோள்!

Next Post

கேரள சாலை விபத்தில் திண்டுக்கல் மாணவர்கள் 7 உட்பட 8 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கேரள சாலை விபத்தில் திண்டுக்கல் மாணவர்கள் 7 உட்பட 8 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

கேரள சாலை விபத்தில் திண்டுக்கல் மாணவர்கள் 7 உட்பட 8 பேர் உயிரிழப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin