• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது? | Bihar Pensioner Goes to CSC to Withdraw Pension, but it shows Rs.759 Crore in Bank Account!

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது? | Bihar Pensioner Goes to CSC to Withdraw Pension, but it shows Rs.759 Crore in Bank Account!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது?

திடீரென வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வந்து விழுந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக சென்றவரின் வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த கட்டுரையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

பீகார் மாநிலத்தின் முசாபர்பூரைச் சேர்ந்தவர் 82 வயதான காமேஸ்வர் மிஸ்ரா. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது கிராமத்தில் இருக்கும் பொது சேவை மையத்திற்கு முதியோர் பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். முதலில் அவருடைய அக்கவுண்டில் பணத்தை எடுத்துவிட்டு, பின்னர் அவருடைய மகனின் அக்கவுண்டில் இருக்கும் பணத்தையும் எடுக்க முடிவு செய்தார்.

அதற்காக அங்கிருந்த ஊழியர்கள் முதியவரின் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துள்ளனர். அப்போது லேப்டாப்பில் காட்டிய தொகை முதியவரை மட்டுமல்ல அங்கிருந்த ஊழியர்களையும் திக்குமுக்காட வைத்தது. ஏனெனில் அவர் அக்கவுண்டில் இருந்த மொத்த பேலன்ஸ் ரூ. 759,69,51,951759. தோராயமாக ரூ. 759 கோடி.

வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது?

முதியவர் மட்டுமல்ல அவருடைய மகனின் அக்கவுண்டிலும் அதேபோல ஒரு தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பொது சேவை மைய ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் 2 அக்கவுண்டில் இருந்த மொத்த தொகையையும் கூட்டி பார்த்தால் ரூ.1500 கோடி வரும்.

உடனே அந்த முதியவர் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக வங்கி கிளையை அணுகியுள்ளார். ஊழியர்கள் சாப்ட்வேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரையில் முதியவரிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது புதிதல்ல. இதற்கு முன்பும் சிலர் தங்களுடைய அக்கவுண்டில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான தொகை வரவு வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு இனிவரும் காலத்தில் டிஜிட்டல் சேவைகள் இன்னும் பாதுகாப்பானதாக மாறும்.மேலும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இது போன்ற அதிக தொகை வரவு வைக்கப்பட்டது போல காண்பித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக புகார் அளிப்பது நல்லது!

Share This Article

Story first published: Monday, July 13, 2026, 17:02 [IST]

Other articles published on Jul 13, 2026

Read More

Previous Post

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பலை குறிவைத்து அடித்த ஈரான்.. இந்தியர் மாயமானதால் ஷாக்.. என்ன நடந்தது? | One Indian Missing, 10 Rescued After Iran Attacks Ship in Strait of Hormuz

Next Post

சரவாக்கில் 30 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் தனது முதல் ரொட்டி தொழிற்சாலையை அமைக்க கார்டீனியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. – Malaysiakini

Next Post

சரவாக்கில் 30 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் தனது முதல் ரொட்டி தொழிற்சாலையை அமைக்க கார்டீனியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin