• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 274 பேர் பலி… 1000 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
September 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
லெபனான் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 274 பேர் பலி… 1000 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் – பாலஸ்தீன் ஹமாஸ் போர் நடந்துவரும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிஸ்புல்லாவுக்கும் லெபனானுக்கும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி மாலை 4 மணியளவில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த 1000 பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தது. இதில், 12 பேர் பலியானர், 2800 பேர் காயமுற்றனர்.

இந்த தாக்குதலில் குறிப்பாக, ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்தார். அதேபோல், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டார். முதலில் இந்த விபத்து எப்படி நடந்தது என தெரியாமல் இருந்த நிலையில், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது.

விளம்பரம்

பேஜர்களை தயாரிக்கும் போதே, இஸ்ரேல் உளவாளிகளின் உதவியுடன் அதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், ஸ்கேனர் உள்ளிட்ட எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அது வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல், ரகசிய குறியீடு மூலம் பிசிபி போர்டு இயங்க தொடங்கிய சில நொடிகளில் வெடிமருந்து பேட்டரியுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற சியா விதைகளை எப்படி குடிக்க வேண்டும்.?


அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற சியா விதைகளை எப்படி குடிக்க வேண்டும்.?

இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த மறுநாளே அதாவது 18ம் தேதி மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் மூன்று நபர்கள் இறந்தனர். அப்போது வெடித்த அந்த வாக்கி டாக்கிகளும் பேஜர் வாங்கிய காலகட்டத்திலேயே வாங்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியிருந்தன.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா உறுதி! சுகாதார அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு

இந்நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் இன்று (23ம் தேதி) காலை இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை 274 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்ததிலும், காயமடைந்ததிலும் குழந்தைகள், பெண்கள், மருத்துவச் சிகிச்சையில் இருந்தவர்கள் எல்லாம் இருக்கின்றனர் என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வான்வழி தாக்குதல் என்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு 274 ஆக அதிகரிப்பு; காயம் 1,000+ | Israel bombs Lebanon and 274 killed over 1,000 wounded in Israel attacks on hezbollah

Next Post

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை… அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! – என்ன நடந்தது? | Man Discovers He’s Been Paying His Neighbour’s Electric Bill For 15 Years

Next Post
15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை… அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! – என்ன நடந்தது? | Man Discovers He’s Been Paying His Neighbour’s Electric Bill For 15 Years

15 ஆண்டுகளாக குறையாத கரன்ட் பில்; வெளிவந்த உண்மை... அதிர்ந்துபோன வீட்டு உரிமையாளர்! - என்ன நடந்தது? | Man Discovers He's Been Paying His Neighbour's Electric Bill For 15 Years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin