அமெரிக்க விமான நிறுவனங்கள் லெபனானுக்கு நேரடியாக விமானங்களை இயக்க அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்துத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
முக்கிய சந்திப்பு
குறித்த பதிவில், அமெரிக்கர்கள் இந்த அழகான நாட்டிற்கு எளிதாகச் சென்று வருவதற்கு வசதியாக அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களும் லெபனானுக்கு நேரடியாகச் செல்ல அனுமதிக்குமாறு எனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்னுடன் (Joseph Aoun) நடத்திய முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

