Tamilnadu
oi-Pavithra Mani
தாராபுரம்: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக எம்எல்ஏவாக இருந்த சத்யபாமா ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களம் காண்கிறார். இந்நிலையில் தனக்காக விஜய் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக சத்யபாமா கூறியுள்ளார்.
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தாராபுரம் தொகுதி வெற்றியை முதலமைச்சர் விஜயிடம் காணிக்கையாக அளிப்பேன். தவெக சிறப்பான ஆட்சியை செய்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நமக்கெல்லாம் கிடைத்த ஒரு விடிவாக மக்கள் நினைக்கிறார்கள். நான் இந்த மாவட்ட செயலாளர் பதவி அடைந்ததில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் தன்னிச்சையாக வந்து சேர்கிறார்கள். மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், நேர்மையாகவும் தலைமை உள்ளது.

எடப்பாடியின் தன்னிச்சை செயல்பாடு
இதனால் மக்கள் விரும்புகிறார்கள். நம் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. எப்போதுமே உண்மைக்கு புறம்பான தகவலை பரப்புவது தான் எதிர்க்கட்சிகளின் வேலை. நான் பலமுறை சொல்லிவிட்டேன். திமுகவுடன் கூட்டணி என்று அதிமுக என்று முடிவெடுத்தது எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஒரே காரணத்தால் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தவெகவில் இணைந்தேன். எடப்பாடியார் தலைமை ஏற்றதில் இருந்து அவரால் எந்த வெற்றியையும் கட்சிக்கு கொடுக்க முடியவில்லை.
திமுகவின் கூட்டணி, உள்கட்சி பிரச்சனை ஆகியவற்றில் உடன்பாடில்லை. ஆரம்பத்தில் இருந்து அவர் எடுத்த முடிவுகள் சரியவில்லை. எடப்பாடியின் முடிவு தன்னிச்சையாக இருந்தது. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்வார். அதனால் ஏராளமான குளறுபடிகள் இருந்தன. அந்த குழப்பங்களாலும், திமுகவின் கூட்டணி முயற்சியால் தான் அதிமுகவில் இருந்து விலகினேன். மக்கள் சேவை செய்வது தான் நோக்கம்.
விஜய் பிரச்சாரம் எப்போது
எந்த குதிரை பேரமும் நடக்கவில்லை. இந்த வாய்ப்பின் மூலமாக அது தெளிவாகியிருக்கும். கடந்த பொதுத்தேர்தலில் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இப்போது இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் உள்ளது. அதனால் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நான் மாவட்ட செயலாளர் ஆனதில் இருந்து மக்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். மக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முதலமைச்சர் விஜய் எனக்காக பிரச்சாரம் செய்வார்” என்றார்.

