ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 முக்கிய அப்டேட்..!! ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு அரசு நடவடிக்கை..!!
ஆயுதபூஜை விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு லட்சக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அனைவரும் இவற்றை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
பொதுவாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினமாக இருக்கும். இந்நிலையில், நாளை மறுநாள் ஆயுதபூஜை, தொடர்ந்து விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை தினங்கள் வருகின்றன. எனவே ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதற்காக தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் , இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும். எனவே பொதுமக்கள் நாளைய தினம் ரேஷனுக்கு சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம். ரேஷன் கடைகள் நாளை அக்டோபர் 18ஆம் தேதி இயங்குவதால், அதற்குப்பதில், நவம்பர் 21ஆம் தேதி விடுமுறையாக இருக்கும் என உணவு வழங்கல் துறை ஆணையர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவது போல் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு அரசு சார்பில் சிறப்பு இலவச மளிகை தொகுப்பு வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கும். பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் முழு முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இதில் இருக்கும். இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 700 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அதாவது சமையல் எண்ணெய் 2 லிட்டர், சர்க்கரை 2 கிலோ, கடலைப்பருப்பு 1 கிலோ, ரவை அரை கிலோ, மைதா அரை கிலோ அடங்கிய சிறப்பு தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே அதேபோல, தமிழகத்திலும் தீபாவளி பரிசு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்த செலவின விவரங்களை நிதி துறையிடம் முதலமைச்சர் விஜய் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே தமிழக அரசு சிறப்பு தீபாவளி தொகுப்பை வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

