Last Updated:
Repo Rate | நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5%ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டிக் கூட்டம் நடைபெறும். அப்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில், நிதிக் கொள்கை கமிட்டிக் கூட்டம் முடிந்து ஊடகங்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25 சதவீதமாக நீடிக்கும் என்றார். இதனால் வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகளின் வட்டி விகிதம் உயராது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7%ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது முந்தைய கணிப்பை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.

