Last Updated:
நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இன்றி 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏற்படவில்லை.
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 6.9 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.

