05
இதனால், வீடு, வாகனக் கடன்களை விரைவாக அடைக்க உதவும் என்றும் விவரிக்கின்றனர். அதாவது, ஒருவர் 30 லட்சம் வீட்டுக் கடனை 9 சதவீத வட்டிக்கு வாங்கி 20 ஆண்டுகளில் அடைக்கத் திட்டமிட்டிருந்தால், அவரது மாதந்திர தவணைத் தொகை 26 ஆயிரத்து 992-லிருந்து 26 ஆயிரத்து 551 ஆகக் குறையும் என்று கூறப்படுகிறது. அதாவது 480 ரூபாய் மிச்சமாகும். இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. உங்கள் வங்கி எந்த அளவுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கிறது என்பதைப் பொறுத்து உங்கள் EMI சேமிப்பு அமையும். அதேநேரம் நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு, அவர்களின் EMIகள் மாற்றமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


