• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.9999, ரூ.999.. உண்மையில் எதற்காக இத்தகைய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா? | why products cost 99 instead of 100 marketing-trick explained

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.9999, ரூ.999.. உண்மையில் எதற்காக இத்தகைய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா? | why products cost 99 instead of 100 marketing-trick explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.9999, ரூ.999.. உண்மையில் எதற்காக இத்தகைய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா?

சூப்பர் மார்க்கெட்டிற்கோ அல்லது பெரிய பெரிய மால்களுக்கோ செல்லும்போது அங்குள்ள பொருட்களின் விலையை பார்த்திருக்கிறீர்களா? சில பொருட்களின் விலை ரூ.100, ரூ.1000, ரூ.10,000 என்று முழு நம்பராக இருக்காது. அதற்கு பதிலாக ரூ.99, ரூ.999, ரூ.9999 என்று தான் போடப்பட்டிருக்கும். உண்மையான விலையே இதுதான் என்று நினைத்துக் கொண்டு நாமும் வாங்கி விடுவோம். ஆனால் இப்படி விலைப்பட்டியல் போடுவதற்கு பின்னால் ஒரு சீக்ரெட் இருக்கிறது.

ஏன் இந்த பிரைசிங் தெரியுமா?: ஆங்கிலத்தில் இதை சார்ம் பிரைசிங் அல்லது சைக்காலஜிக்கல் பிரைசிங் என்று அழைக்கின்றனர். சில்லறை விற்பனையாளர்கள் வேண்டுமென்றே முழு நம்பராக விலையை கொடுக்காமல் அதில் இருந்து 1 ரூபாய் குறைத்து விலை நிர்ணயம் செய்கின்றனர்.

ரூ.9999, ரூ.999.. உண்மையில் எதற்காக இத்தகைய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா?

உண்மையிலேயே 1,000 ரூபாய்க்கும் 999-க்கும் வித்தியாசம் என்னவோ 1 ரூபாய் தான். ஆனால் 999-ஐ பார்க்கும்போது நமக்கு விலை மலிவானதாக தோன்றும். இதனால் வரும் வாடிக்கையாளர்கள் எந்த யோசனையும் இன்றி உடனே அந்த பொருளை வாங்கி விடுவார்கள். இதனால் தான் இப்படி ஒரு யுத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று நேற்றல்ல இதை காலம் காலமாக விற்பனையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 1800 களில் கடைக்காரர்கள் பொருட்களின் விலையை 1 டாலருக்கு பதிலாக 99 சென்ட் என நிர்ணயித்தனர். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள ஊழியர்கள் விற்பனை செய்துவிட்டு பணத்தை தங்கள் பையில் போட்டுக் கொள்வார்கள். இது போன்ற தவறுகளை தடுக்க வேண்டும் என்பதற்காக 99 என்று கடைக்காரர்கள் விலை வைத்தனர்.

எப்படி இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மீதி பணத்தை வாங்கிவிட்டு தான் செல்வார்கள். அதற்காகவாவது ஊழியர்கள் அங்குள்ள பணப்பெட்டியை திறந்து பணத்தை போட்டு விடுவார்கள் என்ற காரணத்திற்காக இந்த யுக்தியை அப்போது பயன்படுத்தினர். ஆனால் இப்போது டிஜிட்டல் பேமெண்ட் தளங்களின் வரத்து அதிகரித்தாலும்.. மக்களின் மனநிலையை மாற்றி ஒரு பொருளை வாங்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இன்றளவும் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விலை நிர்ணயத்திற்கு பின்னால் இருக்கும் மற்றொரு காரணம் என்ன தெரியுமா? 9 என்று முடியும் எந்த விலையை நிர்ணயித்தாலும் அது பார்ப்பதற்கு சலுகை விலை போல வாடிக்கையாளர்களுக்கு தோன்றுமாம். அதனால் தான் ஜவுளி கடைகளில் 1,000 ரூபாய் என்ற விலையுள்ள டி-ஷர்ட்க்கு 999 என்ற விலை போடப்பட்டிருக்கும்.

இதை பார்க்கும் வாடிக்கையாளர்களும் ஏதோ தள்ளுபடியில் அந்த டீ-ஷர்ட் கிடைப்பதாக நினைத்துக் கொண்டு வாங்கி விடுவார்களாம். ஒற்றைப்படை இலக்கத்தில் முடியும் எந்த விலையை பார்த்தாலும் மனிதர்களின் மூளை அதை தள்ளுபடி என்ற நோக்கில் பார்க்கிறது.

சில விற்பனையாளர்கள் இந்த 9 என்ற சீக்ரெட் யுக்தியை பயன்படுத்துகின்றனர். ஆனால் விலை உயர்ந்த லக்சரி பிராண்டுகள் இதற்கு நேர் மாறாக முழுமையாக முடியும் நம்பரையே விலையாக வைக்கின்றன. உதாரணமாக லக்சரி பிராண்டுகளின் ஹேண்ட் பேக்குகள் 20,000, 30,000, 50,000 என்ற விலையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் லக்சரி பிராண்டை விரும்பி வாங்கும் மக்களுக்கு அந்தப் பொருள் தரமானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் தெரியும். கௌரவத்திற்காக பொருட்கள் வாங்கும் சிலருக்கு இது போன்ற விலை நிர்ணயம் மிகவும் பிடிக்கும்.

மறுமுறை நீங்கள் கடைக்கு செல்லும் போது கடைக்காரர்களின் விலைப்பட்டியலை ஒரு முறை கவனியுங்கள். நீங்கள் வாங்கும் பொருட்கள் உண்மையிலேயே உங்களுக்கு தேவையா? என்பதை கவனித்து விட்டு வாங்குங்கள்!

Share This Article

Story first published: Tuesday, August 4, 2026, 14:51 [IST]

Other articles published on Aug 4, 2026

Read More

Previous Post

காசாவில் 112 பேருக்கு கூட்டாக இறுதிச் சடங்கு: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட உடல்கள் அடக்கம்

Next Post

குபாங் பாசுவில் 9 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்! | Makkal Osai

Next Post
குபாங் பாசுவில் 9 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்! | Makkal Osai

குபாங் பாசுவில் 9 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin