02
“ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தேவையை நான் என்றுமே பெரிதாக நினைத்ததில்லை. வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிரமப்படும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தான் முக்கியம்”. இப்படிச் சொன்னவர் தான் தியாகராஜன். இந்த நோக்கத்திற்காகத் தான் 1974 ஆம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனத்தை தொடங்கினார் இவர். கடன் வழங்கும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கினால் திவாலாகி விடும் என பலரும் எச்சரித்த நிலையிலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சாதாரண மக்களுக்கு ட்ரக்குகள், டிராக்டர்கள் வாங்க கடன் வழங்கியும், அவர்கள் சேமிப்பதற்காக சீட்டு திட்டங்களை தொடங்கியும் நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகனானார் தியாகராஜன்.