Last Updated:
ஃபிரோசாபாத்தில் ஆட்டோ ஓட்டுநரை பெண் பயணி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ரூபாய் கூடுதல் கட்டணம் கேட்டதால் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் வெளியில் சென்றுள்ளார். பின்னர் தனது வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து ஏதும் வராததால் அவ்வழியாக வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறியுள்ளார். அந்த பெண் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ரிக்ஷாவை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது பெண் பயணியிடம் ஓட்டுநர் கூடுதலாக 5 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ரிக்ஷா ஓட்டுநர் வாய்க்கு வந்தபடி பேசியதால் பெண் கடும் கோபம் கொண்டுள்ளார். உடனே ஆவேசமடைந்த பெண், ஓட்டுநரை வெளியே இழுத்துப் போட்டு தாக்கியுள்ளார். தொடர்ந்து சட்டையை பிடித்து ஓவரா பேசுவாயா? என்று கேட்டு லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளார். அதற்கு ஓட்டுநரும் பெண் என்றும் பாராமல் பதிலுக்கு தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தால் மிகவும் பரபரப்பாக காணப்படும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் களேபரமானது. ஐந்து ரூபாய் கூடுதலாக கேட்டதற்காக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை பெண் பயணி கடுமையாக தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி ஃபிரோசாபாத் நகரில் பேசு பொருளாகியுள்ளது.


