கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த பிரேசிலின் மறைந்த ஜாம்பவான் பீலே (Pelé), தனது 17-வது வயதில் விளையாடி உலகப் புகழ்பெற்ற 1958-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் ஜெர்சி, நியூயார்க்கில் உள்ள பிரபல சோத்பீஸ் (Sotheby’s) ஏல நிறுவனம் மூலம் ஏலத்திற்கு வந்தது. உலகெங்கிலும் உள்ள தீவிர கால்பந்து ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஏலத்தின் முடிவில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 10-ஆம் எண் கொண்ட நீல நிற ஜெர்சியானது, இந்திய மதிப்பில் சுமார் 47 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு ($4.9 Million) ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. பீலே பயன்படுத்திய நினைவுப் பொருட்களிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன பெருமையை இது பெற்றுள்ளது.


