• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன? | UPI MDR from Oct 15: Tamil Nadu petrol pumps to refuse UPI above ₹2,000? Ground reality, dealer stand & what drivers must know

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன? | UPI MDR from Oct 15: Tamil Nadu petrol pumps to refuse UPI above ₹2,000? Ground reality, dealer stand & what drivers must know
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன?

இந்தியாவில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் யூபிஐ பேமெண்டில் எம்டிஆர் (MDR -Merchant Discount Rate) எனப்படும் புதிய கட்டணம் நடைமுறைக்கு வர உள்ளது. இதுநாள் வரை முற்றிலும் இலவசமாக இருந்த யூபிஐ படிப்படியாக கட்டண முறைக்கு மாற இருப்பதற்கான ஒரு தொடக்கம் தான் இந்த எம்டிஆர் கட்டணம்.

எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன?: தேசிய கொடுப்பனவு கழகமான NPCI (National Payments Corporation of India) வெளியிட்டுள்ள விதிகளின் படி அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் எம்டிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் யூபிஐ மூலம் வருமானம் பெறும் வணிகர்கள் இந்த எம்டிஆர் கட்டண வரம்பிற்குள் வருவார்கள்.

ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன?

எவ்வளவு கட்டணம்?: தனிநபர்களுக்கு இடையிலான யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை, ஆனால் வணிகர்களுக்கு நாம் செலுத்தும் யூபிஐ கட்டணம் 2000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வணிகர் தன் சார்பாக 0.4% தொகையை எம்டிஆர் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த எம்டிஆர் கட்டணம் வங்கிகளுக்கும் யூபிஐ சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் பகிர்ந்து தரப்படும்.

பெட்ரோல் விற்பனை: பெட்ரோல் விற்பனையும் இந்த எம்டிஆர் வரம்புக்குள் வருகிறது. அதாவது ஒரு வாடிக்கையாளர் பெட்ரோல் பங்க்கில் 2000 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட்டு அதனை யூபிஐ மூலம் செலுத்தினால் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டும். இது 5 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏன் எதிர்ப்பு: இதற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் விற்பனை சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. டீலர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் கமிஷன் அல்லது லாபம் தோராயமாக 3.50 ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த சூழலில்,2,000 ரூபாய்க்கும் அதிகமான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 5 ரூபாய் எம்டிஆர் கட்டணம் என்பது தங்களின் ஒட்டுமொத்த லாபத்தையே முழுமையாக பாதிக்கும் என்கின்றனர் டீலர்கள்.

எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்பு?: இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் டீலர் சங்கங்கள், எம்டிஆர் கட்டணம் நடைமுறைக்கு வந்தால் அன்றைய தேதியில் இருந்து 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பேமெண்ட்களை பெற மாட்டோம் என்று எச்சரித்துள்ளன. மத்திய பிரதேசம், டெல்லி-என்சிஆர் மற்றும் காசியாபாத், பஞ்சாப் ,உத்தரப் பிரதேசம் , மகாராஷ்டிரா , கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கங்கள் 2000 ரூபாய்க்கு மேல் யூபிஐ பேமெண்ட்களை ஏற்க போவதில்லை என அறிவித்துள்ளன.

மீண்டும் ரொக்கமா?: இது பொதுமக்களாகிய நமக்கு பெரிய சிக்கல். ஏனெனில் கார் வைத்திருப்பவர்கள், டாக்ஸி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் 2000 ரூபாய்க்கு மேல் தான் பெட்ரோல் போடுவார்கள். தற்போது யூபிஐ மூலம் அந்த பணத்தை பெற மாட்டோம் என பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அறிவித்தால் நாம் கையில் ரொக்கமாக தான் அந்த பணத்தை கொடுக்க வேண்டி இருக்கும். இது இன்னமும் சிக்கலை தான் உண்டாக்கும்.

என்ன கோரிக்கை: இந்த விவகாரத்தில் அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் ஆதரவுடன் மத்திய அரசுக்கு முக்கியமான ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. அதில் பெட்ரோல் பங்க்குகளை இந்த எம்டிஆர் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?: ஒருவேளை அரசு இதற்கு விலக்கு அளிக்கவில்லை என்றால், பல மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களிலும் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் ரொக்கமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் சங்கம் என்ன முடிவெடுத்துள்ளது, மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 2000 ரூபாய்க்கு மேல் யூபிஐ மூலம் பேமெண்ட் செய்ய முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.

குட் ரிட்டர்ன்ஸுக்கு பேட்டி: இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளியை தொடர்பு கொண்டது குட் ரிட்டர்ன்ஸ் தமிழ், அப்போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் டீலர்களுக்கு செலவு போக 3.60 ரூபாய் தான் லாபமே நிற்கிறது என கூறியுள்ளார். இதில் 2000 ரூபாய்க்கு மேல் கொண்ட பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாய் எம்டிஆர் கட்டணம் என்றால் அது மொத்தமாக லாபத்தை குறைக்கும் என்பதால் தான் இந்த எதிர்ப்பு நிலவுவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2000 ரூபாய்க்கு மேல் உள்ள யூபிஐ பரிவர்த்தனைகளை ஏற்க மாட்டோம் என்ற எந்த ஒரு முடிவையும் தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் சங்கம் எடுக்கவில்லை என கூறியுள்ளார். அந்தந்த பெட்ரோல் விற்பனை டீலர்களே இது தொடர்பாக முடிவெடுத்து கொள்ளலாம் என கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே அந்தந்த பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் தான் 2000 ரூபாய்க்கு மேல் யூபிஐ பரிவர்த்தனையை ஏற்பதா வேண்டாமா என்ற முடிவினை எடுக்க போகிறார்கள் ஒட்டு மொத்தமாக சங்கம் சார்பாக அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என விளக்கம் தந்துள்ளார்.

இருந்தாலும் எம்டிஆர் கட்டணத்தில் இருந்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விலக்கு தர வேண்டும் என்ற அகில இந்திய பெட்ரோல் டீசர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை தான் தங்களின் கோரிக்கையும் என தெரிவித்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் 2000 ரூபாய்க்கு மேல் யூபிஐ மூலம் பெட்ரோல் நிலையங்களில் கட்டணம் செலுத்தலாம் அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை ஒரு வேளை அந்த பெட்ரோல் பங்க் சார்பாக அதனை ஏற்க மாட்டோம் என கூறினால் வாகன உரிமையாளர்கள் மாற்று வழிகளை தான் ஆராய வேண்டும்.

Share This Article

English summary

UPI MDR from Oct 15: Tamil Nadu petrol pumps to refuse UPI above ₹2,000? Ground reality, dealer stand & what drivers must know

ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன? / From October 15, 2026, NPCI’s new UPI MDR rules levy a flat ₹5 charge on fuel payments above ₹2,000 (borne by merchants, not customers). While several states’ dealer bodies warn they may stop accepting UPI above ₹2,000, Tamil Nadu’s petrol dealers’ association says there is no statewide ban yet—individual pumps may decide.

Story first published: Tuesday, September 22, 2026, 16:26 [IST]

Other articles published on Sep 22, 2026

Read More

Previous Post

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Next Post

சிலாங்கூரில் மலாய் ஒதுக்கீட்டு நிலம் 403,391 ஏக்கராக அதிகரித்துள்ளது – Malaysiakini

Next Post

சிலாங்கூரில் மலாய் ஒதுக்கீட்டு நிலம் 403,391 ஏக்கராக அதிகரித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin