• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.198 கோடி மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய நபர்; இந்த குடியிருப்பில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.198 கோடி மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய நபர்; இந்த குடியிருப்பில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆர்ஆர் கேபல் லிமிடெட்டின் (RR Kabel Ltd) நிர்வாக இயக்குநரான ஸ்ரீகோபால் காப்ரா, சமீபத்தில் மும்பையின் ஆடம்பர சொகுசு ரியல் எஸ்டேட் சந்தையில் புகழ்பெற்றதாக உள்ள ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டில் (Oberoi Three Sixty West) கடலை பார்த்தபடி இருக்கும் இரண்டு பரந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ரூ.198 கோடி மதிப்பிலான இந்த பரிவர்த்தனை, வோர்லி போன்ற முக்கிய இடங்களில் உள்ள பிரீமியம் சொத்துக்களில் பணக்கார தனி நபர்கள் முதலீடு செய்யும் போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

விளம்பரம்

அக்டோபர் 2024-ம் ஆண்டின் பிற்பகுதியில், காப்ரா குடும்பம் ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டின் 62-வது மாடியில் அமைந்துள்ள மொத்தம் 13,809 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு அடுத்தடுத்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது. இதில் 7,167 சதுர அடி கொண்ட பெரிய கட்டடம், ஸ்ரீகோபால் கப்ராவின் மகன் ராஜேஷ் கப்ரா மற்றும் அவரது மனைவி மோனல் கப்ரா ஆகியோரால் ரூ.102.76 கோடிக்கு வாங்கப்பட்டது.

6,642 சதுர அடியில் உள்ள இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பை, ஸ்ரீகோபால் மற்றும் அவரது மனைவி கிருதிதேவி கப்ரா ரூ.95.40 கோடிக்கு வாங்கியுள்ளனர். இரண்டு குடியிருப்புகளும் அரேபிய கடலைப் பார்த்தபடி கண்ணைக் கவரும் காட்சிகளை வழங்குகின்றன. இங்கு பிரத்யேகமான பத்து பார்க்கிங் இட வசதிகளும் உள்ளன.

விளம்பரம்

இப்படி ஓபராய் த்ரீ சிக்ஸ்ட்டி வெஸ்டில் வீடுகளை வாங்குவது காப்ரா குடும்பத்தின் முதல் முயற்சி அல்ல; இதற்கு முன்பு நவம்பர் 2019ல் 42வது மாடியில் ரூ.56 கோடிக்கு இரண்டடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினார்கள். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்களது தொடர்ச்சியான முதலீடு மும்பையின் உயரடுக்கினரிடையே இதன் ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் என்பது ஓபராய் ரியாலிட்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சொகுசு குடியிருப்பு வளாகமாகும். இதில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் உள்ளன. இங்கு மக்கள் தங்குவதற்கு வசதியான சொகுசு குடியிருப்புகள் மற்றும் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் உள்ளது. மும்பையின் மிகவும் விரும்பப்படும் சுற்றுப்புறங்களில் ஒன்றான வோர்லியில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, அதிநவீன வசதிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் பரந்த காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்ட உயர் வசதி கொண்ட ஆடம்பரமான வாழ்க்கையை வழங்குகிறது.

விளம்பரம்

இந்த வளாகம் மும்பையின் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில் ஆடம்பரம் மற்றும் தனித்துவத்தின் அடையாளமாக மாறியுள்ளதோடு, பல நட்சத்திர அந்தஸ்துள்ள நபர்களையும் ஈர்த்து வருகிறது. அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் ஒருவர். இதே டவரில் சுமார் ரூ.60 கோடிக்கு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை இவர் வாங்கியுள்ளார். ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் உடனான அவரது தொடர்பு இக்கட்டடத்தின் கவர்ச்சியை மக்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிக்க:
பென்ஷனை தடையின்றி பெற ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைன் & ஆஃப்லைனில் சமர்ப்பிப்பது எப்படி…??

விளம்பரம்

காப்ரா குடும்பத்தின் சமீபத்திய பர்ச்சேஸ், இந்திய கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலங்கள் ஆடம்பர ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் முதலீடு செய்யும் போக்கை பிரதிபலிப்பதாக உள்ளது. ஓபராய் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் சமீபத்தில் குறிப்பிடத்தக்க பரிவர்த்தனைகளைக் கண்டது; உதாரணமாக, அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் ராதாகிஷன் தமானி இங்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.1,200 கோடிக்கு வாங்கியுள்ளார்.

.

Read More

Previous Post

‘இந்தியா வெல்லும் என்று என் இதயம் கூறுகிறது, ஆனால்..’-பார்டர்-கவாஸ்கர் டிராபி குறித்து புஜாரா கணிப்பு

Next Post

Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்! | Adani has been charged with bribery in US – Explained

Next Post
Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்! | Adani has been charged with bribery in US – Explained

Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்! | Adani has been charged with bribery in US - Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin