• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரிக்கெல்டன், சூர்யகுமார், பும்ரா அசத்தல்: மும்பை அணிக்கு 5-வது வெற்றி | MI vs LSG | MI vs LSG Highlights, IPL 2025

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரிக்கெல்டன், சூர்யகுமார், பும்ரா அசத்தல்: மும்பை அணிக்கு 5-வது வெற்றி | MI vs LSG | MI vs LSG Highlights, IPL 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐபிஎல் கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

இந்த ஆட்​டம் மும்பை வான்​கடே மைதானத்​தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய மும்பை இந்​தி​யன்ஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 215 ரன்​கள் குவித்​தது.

ரியான் ரிக்​கெல்​டன் 58 ரன்​கள் (32 பந்​துகள், 6 சிக்​ஸர், 4 பவுண்​டரி) குவித்து அசத்​தி​னார். ரோஹித் சர்மா 12, வில் ஜேக்ஸ் 29 (21 பந்​து, 3 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்), திலக் வர்மா 6, ஹர்​திக் பாண்​டியா 5, கார்​பின் போஷ் 20 ரன்​கள் சேர்த்​தனர். சூர்​யகு​மார் யாதவ் அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில் 54 ரன்​கள் விளாசி​னார். நமன் திர் 11 பந்​துகளில் 25 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்தார்.

லக்னோ அணி தரப்​பில் மயங்க் யாதவ், அவேஷ் கான் ஆகியோர் தலா 2, பிரின்ஸ் யாதவ், திக்​வேஷ் ராத்​தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். பின்​னர் 216 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய லக்னோ அணி 20 ஓவர்​களில் 161 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்வி கண்​டது.

மிட்​செல் மார்ஷ் 34, எய்​டன் மார்​கிரம் 9, நிக்​கோலஸ் பூரன் 27, ரிஷப் பந்த் 4, ஆயுஷ் பதோனி 35, டேவிட் மில்​லர் 24, அப்​துல் சமத் 2, ரவி பிஷ்னோய் 13, அவேஷ் கான் 0, பிரின்ஸ் யாதவ் 4 ரன்​கள் எடுத்​தனர். மும்பை அணி தரப்​பில் பும்ரா 4, போல்ட் 3, ஜேக்ஸ் 2, கார்​பின் போஷ் ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

இதையடுத்து 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மும்​பை, இந்​தத் தொடரில் தொடர்ச்​சி​யாக 5-வது வெற்​றியைப் பதிவு செய்​தது. இதன்​மூலம் 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 4 தோல்வி​களைப் பெற்று 12 புள்​ளி​களு​டன் பட்​டியலில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 2-வது இடத்துக்கு முன்​னேறி​யுள்​ளது.

அதிக சிக்ஸர்கள்: ரோஹித் 2-ம் இடம் – ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா 2-வது இடம் பெற்றுள்ளார். அவர் இதுவரை 297 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா, 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன்மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் 297 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் எம்.எஸ். தோனியும், 5-வது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸும் உள்ளனர்.

29 ரன்​கள் குவித்​ததோடு, ஒரே ஓவரில் 2 விக்​கெட் வீழ்த்​திய வில் ஜேக்ஸ் ஆட்​ட​நாயக​னாகத் தேர்​வா​னார். இது​வரை, லக்னோ அணி 10 போட்​டிகளில் விளை​யாடி 5-ல் வெற்​றி, 5-ல் தோல்​வி​யுடன் 10 புள்​ளி​களை எடுத்​துள்​ளது.இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றதுடன் சேர்த்து இந்​தத் தொடரில் தொடர்ச்​சி​யாக 5 வெற்​றிகளை மும்பை அணி பதிவு செய்​துள்​ளது. இதற்கு முன்பு 2008-ல் 6 முறை தொடர்ச்​சி​யாக வெற்​றியைப் பதிவு செய்​தது அந்த அணி. மேலும் 2010, 2013, 2015, 2017, 2020-ம் ஆண்​டு​களி​லும் மும்பை அணி தொடர்ச்​சி​யாக 5 வெற்​றிகளைப் பதிவு செய்​திருந்​தது.

அதே​போல் மும்பை அணிக்​காக ஐபிஎல் போட்​டிகளில் 174 விக்​கெட்​களை எடுத்து அதிக விக்​கெட்​களை எடுத்​தவர் பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார் பும்​ரா. அவருக்கு அடுத்​த​படி​யாக மும்பை அணிக்​காக லசித் மலிங்கா 170 விக்​கெட்​களும், ஹர்​பஜன் சிங் 127 விக்​கெட்​களும், மிட்​செல் மெக்​கிளெனகன் 71 விக்​கெட்​களும், கெய்​ரன் போலார்ட் 69 விக்​கெட்​களும்​, ஹர்​திக்​ பாண்​டி​யா 65 விக்​கெட்​களும்​ எடுத்துள்ளனர்.



Read More

Previous Post

‘மூடப்பட்ட கதவுகள்.. முடிந்ததா அரசியல் பயணம்?’ பொன்முடியின் அரசியலும் சர்ச்சைகளும்!

Next Post

தாய் – தந்தையை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த கொடூர மகன் | Makkal Osai

Next Post
தாய் – தந்தையை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த கொடூர மகன் | Makkal Osai

தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த கொடூர மகன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin