Last Updated:
நாடாளுமன்ற வளாகத்தில் ராமர் கோயில் நன்கொடை முறைகேடுக்கு எதிராக போராடிய ராகுல் காந்தி உட்பட எம்.பி.க்கள் மீது வாரணாசி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்திய இந்த நூதன போராட்டத்திற்காக ராகுல் காந்தி உட்பட எம்.பி.க்கள் மீது வாரணாசி காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பணத்தில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினர்.
#WATCH | Gwalior | Bajrang Dal held a protest against opposition MPs, including Lok Sabha Leader of Opposition Rahul Gandhi, over the opposition’s protest outside Parliament regarding the alleged Ayodhya Ram Mandir donations embezzlement pic.twitter.com/9MGRmkyqC8
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 1, 2026
இதையடுத்து, சனாதன தர்மத்தை அவமதித்ததாக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரணாசியில் சில துறவிகள் புகாரும் அளித்த நிலையில், துறவியாக வேடமிட்டிருந்த சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ், உண்டியலில் பணம் போட்ட ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி எம்.பி. அவதேஷ் பிரசாத் ஆகியோர் மீது வாரணாசி காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


