Last Updated:
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிரவீனின் சாதனை அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதே போட்டியில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், அவரது தாயார் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், வெள்ளி வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.


