• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! | Ranipet Missing Baby Rescued in Andhra Pradesh, Five Arrested in Kidnapping Case

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! | Ranipet Missing Baby Rescued in Andhra Pradesh, Five Arrested in Kidnapping Case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Rajkumar R

Time
Published: Wednesday, October 28, 2026, 19:59 [IST]

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் வானாபாடி செல்லும் சாலையோரமாக ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவின் குழந்தையை மீட்டுள்ளனர் தனிப்படை போலீசார். கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் தவெக ஆதரவாளர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் தொழிலை செய்து வரும் சேகர் பிரேமா தம்பதியினர் தங்களது ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரியுடன் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இரவு மாணிக்க நகர் அருகேயுள்ள சாலையோரமாக உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

Ranipet

மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, அருகிலிருந்த குழந்தை காணாமல் போனது தெரியவந்தது மேலும் இதுகுறித்து தாய் பிரேமா அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

'ஜேகே டயர் புகழ்'.. ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா யார்? இவரது பின்னணி என்ன?

‘ஜேகே டயர் புகழ்’.. ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா யார்? இவரது பின்னணி என்ன?

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தை காணாமல் போன பகுதி மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்..

Ranipet

இதில் அக்ராவரம் பகுதியை சேர்ந்த கௌசல்யாவின் தோழியான ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்த மல்லீஸ்வரி தனக்கு குழந்தை வேண்டுமென கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கௌசல்யா தனது கணவர் பூபதியிடம் தெரிவித்த நிலையில், பூபதி தனது நண்பர் கார் ஓட்டுநருமான சந்தோஷிடம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை தொடங்கி.. நீலகிரி வரை மொத்தமாக நனையப்போகுது! பறந்து வந்த அலர்ட்

ராணிப்பேட்டை தொடங்கி.. நீலகிரி வரை மொத்தமாக நனையப்போகுது! பறந்து வந்த அலர்ட்

இதை அடுத்து சந்தோஷ், பூபதி, குமரன் ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு வயது மகேஸ்வரி குழந்தையை கடத்தி சென்று ரேணிகுண்டாவில் இருந்த மல்லீஸ்வரியிடம் ஒப்படைத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதிக்கு சென்ற சிறப்பு தனிப்படை போலீசார் மல்லீஸ்வரியைக் (44) என்பவரை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர் இச்சம்பவத்தில் தொடர்புடைய கௌசல்யா (35), பூபதி(42) சந்தோஷ் (35), குமரன் (30)ஆகியோரையும் கைது செய்தனர் மேலும் குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ், தவெக ஆதரவாளர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தவெக நிர்வாகி ஒருவருக்கு ஓட்டுனராக சந்தோஷ் பணியாற்றி வந்ததும் பணத்துக்காக குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

English summary

Police rescue a one-year-old girl from Renigunta in Andhra Pradesh and arrest five suspects, including a man reportedly linked to TVK.

Read More

Previous Post

பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழப்பு: ஹோமாகம குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது – மூவர் பணி இடைநிறுத்தம்! – Sri Lanka Tamil News

Next Post

அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..! | Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran

Next Post
அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..! | Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran

அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கை.. ஈரானுக்கு வைக்கப்பட்ட கண்டிஷன்.. தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்..! | Final Warning to Iran! US Sets 3 Strict Conditions as Israel Prepares for Massive Joint Strike on Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin