• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழப்பு: ஹோமாகம குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது – மூவர் பணி இடைநிறுத்தம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழப்பு: ஹோமாகம குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது – மூவர் பணி இடைநிறுத்தம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழப்பு: ஹோமாகம குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது – மூவர் பணி இடைநிறுத்தம்!

ஹோமாகம பொலிஸ் காவலில் 29 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்; விசாரணை தீவிரம்.


ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்தப் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிகாரி உட்பட ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி பிட்டிபன சந்திப் பகுதியில் வைத்து போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் வழங்கிய தகவல்களின்படி, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பின்னர் குறித்த இளைஞருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதில் நீதவான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சடலம் தொடர்பான நீதவான் விசாரணையையும் மேற்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞரின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை, களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், ஹோமாகம பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையும் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பணி இடைநிறுத்தப்பட்டவர்களில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர், ஒழுக்கக்கேடு தடுப்புச் சோதனைப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் துணைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஹோமாகம பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹோமாகம இரண்டாம் மாவட்டத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவும் சம்பவம் தொடர்பில் தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இளைஞரின் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரேதப் பரிசோதனையின் இறுதி முடிவுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையிலேயே மரணத்திற்கான காரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

ஆபாசப் படங்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்காகப் பள்ளித் தலைவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Malaysiakini

Next Post

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! | Ranipet Missing Baby Rescued in Andhra Pradesh, Five Arrested in Kidnapping Case

Next Post
ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! | Ranipet Missing Baby Rescued in Andhra Pradesh, Five Arrested in Kidnapping Case

ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! | Ranipet Missing Baby Rescued in Andhra Pradesh, Five Arrested in Kidnapping Case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin