Last Updated:
“ராகுல் காந்தியின் அணுகுமுறை, இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதற்கு பதிலாக பாஜகவை வலுப்படுத்தி வருகிறது” – பினராயி விஜயன்.
ராகுல் காந்தியின் அணுகுமுறை பாஜகவை வலுப்படுத்தி வருவதாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் பேசிய ஆடியோவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அதில், கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்.
அதே சமயம், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் பார்க்கும் போது தன்னால் கட்டிப்பிடிக்க முடியாது என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பினராயி விஜயன், ராகுல் காந்தியின் அணுகுமுறை, இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதற்கு பதிலாக, பாஜகவை வலுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும், ராகுல் காந்தியின் அணுகுமுறையால் தற்போது திமுக எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் பினராயி விஜயன் கூறினார்.
“ராகுல் காந்தியின் அணுகுமுறை பாஜக-வை வலுப்படுத்துகிறது” – பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு!


