Last Updated:
உக்ரைன் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ரஷ்யாவில் பலத்த பாதுகாப்புடன் வெற்றிநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெற்றி நாள் அணிவகுப்பு கோலாகலமாக நடந்துள்ளது.
ரஷ்யாவில் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 9 அன்று கொண்டாடப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வீழ்த்தியதைக் குறிக்கும் மிக முக்கியமான தேசிய விடுமுறை நாளாகும். ஜெர்மனியை எதிர்த்து சோவியத் யூனியன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும், உயிரிழந்த லட்சக்கணக்கானோரை நினைவுக்கூறும் வகையிலும் ரஷ்யாவில் வெற்றி நாள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டம்
தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெட் ஸ்கொயர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் அணிவகுப்பு நடந்தது. இதில் அந்நாட்டின் விமானப்படையினர் நடத்திய வான் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது. உக்ரைன் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பலத்த பாதுகாப்புடன் இந்த அணிவகுப்பு நடந்தது.
இந்த ஆண்டு வெற்றி தினத்தை ஒட்டி ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 நாள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, இவ்வாண்டு மாஸ்கோவில் கனரக ராணுவத் தளவாடங்கள் இன்றி அணிவகுப்பு எளிமையாக நடத்தப்பட்டது.


