Last Updated:
பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.
பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2025 – 26 நிதியாண்டில் பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து மொத்த வருமான வரியாக சுமார் 20 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பீகார் – ஜார்க்கண்ட் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் சுதாகர ராவ், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மட்டும் 12 ஆயிரம் ரூபாய் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இரு மாநிலங்களிலும் சேர்த்து தனி நபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறினார்.
இருப்பினும் தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிட அவர் மறுத்துவிட்டார். கடந்த நிதியாண்டில் சுமார் 38 கோடி ரூபாயை முன்கூட்டியே வருமான வரியாக தோனி செலுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தும் நபர்களில் மகேந்திர சிங் தோனி முதலிடம்!


